இண்டிகோ விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்டிகோ விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி
Updated on
1 min read

பெங்களூரு: இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில் ஆன்​லைன் மூலம் கலந்​து​கொண்டது வைரலானது.

பெங்​களூருவை சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் மேதா சாகருக்​கும் (29) ஒடி​சா​வின் புவனேஸ்​வரை சேர்ந்த சங்​கமா தாஸ் (26) என்ற பெண்​ணுக்​கும் கடந்த நவம்​பர் 23-ம் தேதி புவனேஸ்​வரில் திரு​மணம் நடை​பெற்​றது. கடந்த 3-ம் தேதி கர்​நாட​கா​வின் ஹுப்​பள்​ளி​யில் புதுமண தம்​ப​தி​யின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

இதற்​காக மேதா சாகரும் சங்​கமா தாஸும் கடந்த 2-ம் தேதி புவனேஸ்​வரில் இருந்து பெங்​களூரு வழி​யாக ஹுப்​பள்ளி செல்​வதற்​காக இண்​டிகோ விமானத்​தில் முன்​ப​திவு செய்​தனர். முதலில் விமானம் 6 மணி நேரம் தாமதம் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், நீண்ட காத்​திருப்​புக்​குப் பிறகு விமானம் ரத்து செய்​யப்​பட்​ட​தாக அறிவிக்​க‌ப்​பட்​ட‌து. இதனால் புதுமண ஜோடி​யால் திட்​ட​மிட்​டபடி ஹுப்​பள்​ளிக்கு செல்ல முடிய​வில்​லை.

இருப்​பினும் அங்​குள்ள உறவினர்​களும், நண்​பர்​களும் மண்​டபத்​தில் குவிந்​தனர். இதையடுத்து மணமக​னின் தந்தை சேகர் தாஸ் சாகர், புதுமண ஜோடிகளை ஆன்​லைன் மூல​மாக திருமண வரவேற்​பில் பங்​கேற்​கு​மாறு கூறி​னார். உடனடி​யாக மண்​டபத்​தில் பெரிய அளவில் 2 திரைகள் அமைக்​கப்​பட்​டு, ஆன்​லைன் வீடியோ கான்பரன்​சிங் மூலம் புதுமண ஜோடிகள் தங்​களின் திருமண வரவேற்​பில் புத்​தாடை அணிந்து பங்​கேற்​றனர்.

மணமக்​களுக்​காக போடப்​பட்​டிருந்த இருக்​கை​களில் அவர்​களது பெற்​றோர் அமர்ந்து சடங்​கு​களைச் செய்​தனர். இதை தொடர்ந்து மணமக்​களை உறவினர்​களும், நண்​பர்​களும் ஆன்​லைன் மூல​மாக‌ வாழ்த்​தினர்.

திரை​யில் தோன்​றிய மணமக்​களு​டன் உறவினர்​கள் நின்​ற​வாறு புகைப்​பட​மும் எடுத்​துக்​கொண்​டனர். ஜிபே, ஃபோன் பே போன்ற செயலிகள் மூல​மாக மொய் பணம் அனுப்​பியதுடன், இன்​ஸ்​டா​மார்ட், பிளிங்க்ட் இன் போன்ற செயலிகள் மூலம் பரிசு பொருட்​களை ஆர்​டர் செய்து அனுப்​பினர். இந்த திருமண வரவேற்​பின் வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில்​ வெளி​யாகி, வைரலாகி​யுள்​ளன.

இண்டிகோ விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in