அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை கட்டாயம்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை கட்டாயம்
Updated on
1 min read

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அர்ச்​சகர்​களுக்​கான புதிய உடை விதி​முறை கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் அமலுக்குவந்துள்​ளது. இதன்​படி, பூஜைகள் மற்​றும் வழி​பாட்டு நிகழ்ச்​சிகளை நடத்​தும் அனைத்து அர்ச்​சகர்​களும் பாரம்​பரிய மஞ்​சள் நிற உத்தரீ​யம் (மேலாடை) அணிய வேண்​டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோயி​லின் சமயக் குழு​வால் இந்த விதி​முறை வகுக்கப்பட்டுள்ளது. தினசரி பூஜை, ஆரத்தி உள்​ளிட்ட சடங்குகளை நடத்​தும் அர்ச்​சகர்​கள், தையல் இல்​லாத மஞ்​சள் நிற உத்​தரீயத்தை அணிய வேண்​டும். இது கோயி​லில் பின்பற்றப்படும் வைஷ்ணவ மரபு மற்​றும் ராமானந்​தா​ச்சார்ய பரம்பரையின் (வைஷ்ணவ சமய குரு​வால் தொடங்​கப்​பட்ட ஆன்மிக பரம்​பரை) அடிப்​படை​யில் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது நடை​பெற்று வரும் ஜூலனோத்சவ (ஊஞ்​சல்) விழா​வின்​போது இந்​தப் புதிய உடை முதன்​முறை​யாகப் பொது​வெளி​யில் தெளி​வாகக் காணப்​பட்​டது. மஞ்​சள் நிற உத்​தரீ​யம் அணிந்த அர்ச்சகர்​கள், வேத மந்​திரங்​களு​டன் சடங்​கு​களை நடத்​தி, ராம்லல்​லா​வின் உற்சவ மூர்த்​தியை அலங்​கரிக்​கப்​பட்ட பல்லக்கில் வைத்து விழா​வைத் தொடங்கி வைத்​தனர்.

இந்த ஒருங்​கிணைந்த உடை சமய ஒழுங்​கை​யும், அர்ச்​சகர்​களின் ஆன்​மிக அடை​யாளத்​தை​யும் வலுப்​படுத்​தும் என கோயில் அதிகாரி​கள் கருதுகின்​றனர். கூடு​தல் விதி​முறை​கள் படிப்படியாக வரக்​கூடும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை கட்டாயம்
மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழலில் ஈடுபடவில்லை என கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in