மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழலில் ஈடுபடவில்லை என கடிதம்

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழலில் ஈடுபடவில்லை என கடிதம்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேரவை முன்​னாள் துணை சபா​நாயகர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். அரசி​யலுக்கு வந்​தது தவறு என்​றும் ஊழல் செய்​ய​வில்லை என்றும் அவர் எழு​திய குறிப்பு கிடைத்​திருப்​ப​தால் சர்ச்சை ஏற்பட்டுள்​ளது.

மேற்கு வங்​கத்​தின் ராம்​புர்​ஹட் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2001 முதல் 2026 வரை தொடர்ந்து 5 முறை திரிண​மூல் காங்கிரஸ் சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் ஆஷிஷ் பானர்ஜி (74). மம்தா பானர்ஜி தலை​மையி​லான அரசில் அமைச்சராக​வும், சட்​டப்​பேரவை துணை சபா​நாயக​ராக​வும் பதவி வகித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், பிர்​பூம் நகரில் தனது வீட்​டுக்கு அரு​கில் உள்ள திரிண​மூல் கட்​சி​யின் அலு​வல​கத்​தில் நேற்று காலை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாகக் கண்​டெடுக்​கப்​பட்​டார். அப்​போது காவல் துறை​யினர் அவர் எழு​தி​ய​தாக நம்​பப்​படும் கையெழுத்​துப் பிர​தியை அங்​கிருந்து கைப்​பற்​றினர்.

வங்க மொழி​யில் எழுதப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படும் ஒரு பக்​கக் கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: எனது மரணத்​துக்கு யாரும் பொறுப்​பல்ல. நான் எப்​போதுமே ஊழலில் ஈடு​பட்​ட​தில்​லை. எந்​தவொரு வேலைக்​காக​வும் யாரிட​மும் பணம் வாங்​கியது இல்​லை. திரிண​மூல் கட்​சிக்​குள் நடந்த சில தவறுகளை என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்லை ஆனாலும் அவற்​றுக்கு எதி​ராக என்​னால் குரல் கொடுக்க முடிய​வில்​லை.

தாராபித்​-​ராம்​புர்​ஹட் மேம்​பாட்டு ஆணை​யத்​தின் டெண்​டர் தொடர்​பான முடிவு​கள், காசோலை வழங்​குதல், திட்ட ஒப்​புதல்​கள் அல்​லது தடை​யில்லா சான்​றிதழ் வழங்​கிய​தில் எனக்கு எந்​தப் பங்​கும் இல்​லை. என்னை களங்​கப்​படுத்த எடுக்​கப்​பட்ட செயல்களை நான் கண்​டிக்​கிறேன். நான் அரசி​யலுக்கு வந்​தது தவறு என்று இன்று உணர்​கிறேன். வருங்​காலத்​தில் என் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்​கள் அரசி​யலில் ஈடுபட வேண்டாம் இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மம்தா கண்​டனம்

ஆசிஷ் பானர்ஜி மீது பொய்​யான குற்​றச்​சாட்​டு​களை சுமத்​தி, சில நாட்​களாக துன்​புறுத்​தப்​பட்​ட​தாக​வும், பொதுச்​சேவைக்​காக தன் வாழ்​நாளை அர்ப்​பணித்​தவர் என்​றும் திரிண​மூல் கட்​சித் தலைவர் மம்தா பானர்ஜி குறிப்​பிட்​டுள்​ளார்.

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழலில் ஈடுபடவில்லை என கடிதம்
வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in