முப்படை புதிய தலைமை தளபதி; கடற்படை தளபதி நியமனம்

முப்படை புதிய தலைமை தளபதி; கடற்படை தளபதி நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: முப்படை தலைமைத் தளபதியாக இருக்கும் ஜெனரல் அனில் சவுகானின் பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து முப்படை புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தற்போது தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் தலைமைச் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றுகிறார். இவர் ராணுவத் துணைத் தளபதியாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

இதேபோல் கடற்படையின் புதிய தளபதியாக, துணைத் தளபதியாகப் பணியாற்றும் வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 31-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். இவரது பதவிக் காலம் 2028 டிசம்பர் 31-ல் முடிவடையும்.

முப்படை புதிய தலைமை தளபதி; கடற்படை தளபதி நியமனம்
வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in