நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு பதிவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு சொத்துகளை முறைகேடாக கைப்பற்றிய வழக்​கில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர்​கள் சோனி​யா, ராகுல் காந்தி மீது டெல்லி போலீ​ஸார் புதிய வழக்கு பதிவு செய்​துள்​ளனர்.

முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு​வால் தொடங்​கப்​பட்ட நேஷனல் ஹெரால்டு பத்​திரிகை நஷ்டம் காரண​மாக 2008-ல் மூடப்​பட்​டது. இந்த பத்​திரி​கையை நடத்​திய அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் (ஏஜேஎல்) நிறு​வனத்​துக்கு ரூ.2 ஆயிரம் கோடி சொத்து இருக்​கிறது.

இந்​நிலை​யில், 2010-ம் ஆண்டு புதி​தாக தொடங்​கப்​பட்ட யங் இந்​தி​யன் நிறு​வனம், அசோசி​யேட்​டட் ஜர்​னல்ஸ் நிறு​வனத்​தின் கடனை அடைத்​து​விட்டு அதை கையகப்​படுத்​தி​யது. யங் இந்​தி​யன் நிறு​வனத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர்​கள் சோனியா மற்​றும் ராகுல் காந்​திக்கு 76% பங்​கு​கள் உள்​ளது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, இந்த பரிவர்த்​தனை சட்​ட​விரோத​மானது என புகார் எழுந்​த​தால், இது தொடர்​பாக சிபிஐ மற்​றும் அமலாக்​கத் துறை தனித்​தனி​யாக வழக்கு பதிவு செய்​தன. இந்த வழக்கை டெல்​லி​யிலுள்ள சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், அமலாக்​கத் துறை கொடுத்த புகாரின் பேரில், டெல்லி காவல் துறை​யின் பொருளா​தார குற்​றப்​பிரிவு புதி​தாக ஒரு முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்​துள்​ளது.

இதில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. அத்​துடன் காங்​கிரஸ் கட்​சி​யின் வெளி​நாட்டு பிரிவு தலை​வர் சாம் பிட்​ரோடா உள்​ளிட்ட 3 பேர், ஏஜேஎல், யங் இந்​தி​யன் மற்​றும் டோடெக்ஸ் மெர்ச்​சண்​டைஸ் ஆகிய நிறு​வனங்​களின் பெயரும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

இதையடுத்​து, ஏஜெஎல் பங்​கு​தா​ரர்​களுக்கு சம்​மன் அனுப்​பப்​படும் என கூறப்​படு​கிறது. அவர்​களிடம், ஏஜேஎல் நிறு​வனத்தை யங் இந்​தி​யன் நிறு​வனத்​துக்கு மாற்ற ஒப்​புதல் பெறப்​பட்​டதா என்ற கோணத்​தில் வி​சா​ரிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு பதிவு
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in