2 நாள் பயண​மாக இந்​தியா வந்தார் நேபாள பிரதமர்

பிரதமர் மோடியுடன் இன்று பேச்சு​வார்த்தை
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா

Updated on: 
1 min read

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறைப் பயண​மாக இந்​தியா வந்​துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பிரதமர் நரேந்​திர மோடியை இன்று (23-ம் தேதி) சந்​தித்​துப் பேச்சு​வார்த்தை நடத்து​கிறார். அப்​போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்​படுத்​து​வது குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட உள்​ளது.

நேபாள பிரதம​ராக கடந்த மார்ச் மாதம் பதவி​யேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்​முறை​யாக இந்​தியா வந்​துள்​ளார். இரண்டு நாள் பயண​மாக நேற்று டெல்லி வந்த அவரை, விமான நிலை​யத்​தில் மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை இணை அமைச்​சர் ஜிதின் பிரசாதா வரவேற்​றார்.

இன்று பிரதமர் மோடியைச் சந்​திக்​கும் பாலேந்திர ஷா, எரிசக்தி, நீர்​மின்​சக்தி, ரயில் இணைப்பு, உள்​கட்​டமைப்பு உள்​ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்​துழைப்பை அதி​கரிப்​பது குறித்து ஆலோ​சிக்க உள்​ளார். மேலும், பல்​வேறு துறைகள் சார்ந்த முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தியா, நேபாளத்​தின் மிகப்​பெரிய வர்த்​தகப் பங்​காளியாகத் திகழ்​கிறது.

அந்​நாட்​டின் நேரடி வெளி​நாட்டு முதலீட்​டில் இந்​தி​யாவின் பங்கு கிட்​டத்​தட்ட மூன்​றில் ஒரு பங்​காக உள்​ளது. நேபாளத்​தின் பொருட்​கள் ஏற்​றுமதி​யில் சுமார் 80 சதவீதத்தை இந்​தியா பெறுகிறது. எனவே, வர்த்​தகம் மற்​றும் முதலீட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வது குறித்​தும் இரு தலை​வர்​களும் விவாதிப்​பார்​கள் எனத் தெரி​கிறது.

பிஹாரின் ரக்​சவுல் நகரி​லிருந்து நேபாளத் தலைநகர் காத்​மாண்டு வரை பயணிகள் மற்​றும் சரக்​கு​களைக் கொண்டு செல்​லும் வகை​யில் புதிய ரயில் பாதை அமைப்​பது குறித்​தும் பேச்சு​வார்த்​தையில் ஆலோ​சிக்​கப்​பட உள்​ளது. மேலும், ராமாயணத்​துடன் தொடர்​புடைய அயோத்தி, ஜனக்​பூர் தாம் ஆகிய நகரங்​களுக்கு இடையே புதிய பயணிகள் ரயில் சேவையைத் தொடங்​கு​வது குறித்​தும் இரு நாடுகளும் முடிவெடுக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உள்​கட்​டமைப்பு விரிவாக்​கம், புதிய தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​து​தல், பேரிடர் மீட்பு மற்​றும் பரு​வநிலை மாற்​றம் தொடர்​பான ஒத்​துழைப்பு ஆகிய​வற்​றுக்​கும் இந்​தப் பேச்சு​வார்த்​தையில் முக்​கியத்​து​வம் அளிக்​கப்​படும் என தகவலறிந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்ளன.

<div class="paragraphs"><p>நேபாள பிரதமர் பாலேந்திர ஷா</p></div>
தவெக எம்​எல்​ஏக்​களைத் தொடர்ந்து கூட்​டணி கட்சி எம்எல்​ஏக்​களு​டன் முதல்​வர் விஜய் இன்று ஆலோ​சனை

X