“காங்கிரஸின் இந்து விரோத கொள்கையை எதிரொலிக்கிறார் நேஹா போரா” - பாஜக செய்தித் தொடர்பாளர்

“காங்கிரஸின் இந்து விரோத கொள்கையை எதிரொலிக்கிறார் நேஹா போரா” - பாஜக செய்தித் தொடர்பாளர்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இண்​டியா கூட்​டணியில் மாதிரி நாடாளு​மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்​திந்​திய மாணவர் சங்​கத் (ஏஐஎஸ்ஏ) தலை​வர் நேஹா போரா சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசினார்.

அவரது கருத்​துக்கு பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இது​குறித்து பாஜக தேசிய செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்டாரி கூறும்​போது, “நேஹா போராவின் கருத்​துகள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்​தி​யால் ஈர்க்​கப்​பட்​டவை. ஏனெனில், கோயில்​களுக்​குள் பெண்​களுக்கு தொல்லை கொடுக்கப்படுவதாக ராகுல் முன்பு கூறியது உங்​கள் நினைவில் இருக்​கலாம்.

காங்​கிரஸின் சனாதன தர்​மத்​துக்கு எதிரான சித்தாந்​தப் பிரச்​சா​ரத்​தையே நேஹா போராவின் கூற்றுபிரதிபலிக்​கிறது.

இது ஒட்​டுமொத்த காங்​கிரஸ் சித்​தாந்​தமும் சிந்​தனையும் இந்தியாவின் ஒற்​றுமைக்​கும் ஒரு​மைப்​பாட்​டுக்​கும் எதிரானவை என்​ப​தைக் காட்​டு​கிறது. ஏனெனில் அவர்​கள் சனாதனத்​தைக் களங்​கப்​படுத்தி இந்து மதத்​தைக் குறிவைக்​கிறார்​கள். இது அவர்​களின் வகுப்​புவாத மன​நிலையை வெளிப்​படுத்து​கிறது.

காங்கிரஸ் கட்​சி​யின் டிஎன்ஏ இந்து விரோதம், அரசி​யலமைப்பு விரோதம், சனாதன விரோதம் என்​பதை இது மேலும் உறுதிப்​படுத்து​கிறது” என்​றார்.

“காங்கிரஸின் இந்து விரோத கொள்கையை எதிரொலிக்கிறார் நேஹா போரா” - பாஜக செய்தித் தொடர்பாளர்
தமிழகத்தில் 2029-க்குள் 10 கிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

X