

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நேற்று பாஜக ஆட்சி அமைந்து 4-வது ஆண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பாஜக சார்பில் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 2024-ல் பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தார். ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பிஹாரில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும்.
வரும் 2027-ல் உத்தராகண்டில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.