சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

சரத் பவார்  | கோப்புப்படம்
சரத் பவார் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்சிபி நிறுவனர் சரத் பவார், தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று மதியம் புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராமதியில் உள்ள சரத் பவாரின் வீட்டிலேயே அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், விரிவான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவரை புனேவுக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

"சரத் பவார் மருத்துவமனைக்கு வந்தவுடன், ஒரு மருத்துவக் குழு அவரைப் பரிசோதிக்கும். அதற்கேற்ப அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும்" என்று ரூபி ஹால் கிளினிக்கின் தலைமை இருதயநோய் நிபுணரும், நிர்வாக அறங்காவலருமான பர்வேஸ் கிராண்ட் கூறினார்.

சரத் பவாரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். என்சிபி கட்சியின் மக்களவை உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, அவரது மருமகன் சதானந்த் சுலே ஆகியோரும் மருத்துவமனையில் அவருடன் உள்ளனர்.

சரத் பவாரின் அண்ணன் மகனும், மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் சில நாட்களுக்கு முன்பு விமான விபத்தில் உயிரிழந்தார். அதன்பின்னரும், சரத் பவார் மக்களைச் சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பவார்  | கோப்புப்படம்
புனே மேயரானார் பாஜகவின் மஞ்சுஷா நாக்புரே: கடைசி நேரத்தில் பின்வாங்கிய என்சிபி, காங்கிரஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in