தேசி​ய​வாத காங்​கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முடிவு

தேசி​ய​வாத காங்​கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முடிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியும் முடிவு செய்துள்ளன.

தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலை​வர் ஜிதேந்​திர அவாத் கூறும்​போது, “நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடரில் தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு நாங்​கள் ஆதரவு அளிப்​போம்” என்று தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் பங்​கேற்க சரத்​பவாரின் மகளும் மக்​களவை எம்.பி.யுமான சுப்​ரிலே சுலேவுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்டு இருந்​தது.

ஆனால் அவர் கூட்​டத்​தைப் புறக்​கணித்​தார். நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத் தொடரில் கட்சி எம்.பி.க்​கள் அனைவரும் தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க அவர் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

தேசி​ய​வாத காங்​கிரஸுக்கு (சரத் பவார் அணி) மக்​களவை​யில் 8 எம்.பி.க்களும் மாநிலங்​களவை​யில் ஒரு எம்.பி.யும் (சரத் பவார்) உள்​ளனர். விரைவில் சுப்​ரியா சுலேவுக்கு மத்​திய அமைச்​சர் பதவி வழங்​கப்​படும் என்​றும் மகாராஷ்டிர அரசில் அவரது கட்​சிக்கு 2 அமைச்​சர் பத​வி​கள் வழங்​கப்​படும் என்​றும் கூறப்​படு​கிறது.

இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தும் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

மேலும், இண்​டியா கூட்​ட​ணி​யில் இருந்து விலகி பாஜக கூட்​ட​ணிக்கு மாறிய தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சியை எதிர்க்​கட்​சிகள் மிகக் கடுமையாக விமர்​சித்து வரு​கின்​றன.

பிஆர்​எஸ் நிபந்​தனை

தெலங்​கானா மாநிலத்​தில் பிஆர்​எஸ் கட்​சி​யின் செயல் தலை​வரும், முன்​னாள் அமைச்​சரு​மான கே.டி.ராமாராவ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு நாங்​கள் மத்​திய அரசுக்கு ஆதரவு அளிப்​போம். தெலங்​கானா மாநிலத்​துக்கு எந்​த அநீதி​யும் இழைக்க கூடாது. தென்​னிந்​தி​யாவில் நாடாளு​மன்ற தொகுதி​களைக் குறைக்​கக் கூடாது ஆகிய நிபந்​தனைகளு​டன் தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு நாங்​கள் ஆதரவு அளிக்​கிறோம். தெலங்​கானா நலன்​களுக்கு முன்​னுரிமை அளித்து, எங்​களு​டைய 3 மாநிலங்​களவை உறுப்​பினர்​களும் இந்த முன்​மொழிவுக்கு ஆதர​வாக வாக்​களிப்​பார்​கள்.

மகளிர் இட ஒதுக்​கீட்டை நாங்​கள் எப்​போதுமே எதிர்த்​தது கிடை​யாது. அதனை நடைமுறைப்​படுத்​து​வதிலும் நாங்​கள் தொடர்ந்து உறுதி​யாக இருக்​கிறோம். மேலும், வரும் 2051-ம் ஆண்டு வரை மாநிலங்​களுக்கு இடை​யி​லான நாடாளு​மன்ற பிரதி​நி​தித்​துவ விகிதத்​தில் எந்த மாற்​றங்​களும் செய்ய கூடாது என்ற பாது​காப்பு அம்​சமும் தொகுதி மறு​வரையறை​யில் இடம்பெற்​று உள்ளது.

தொகுதி மறு​வரையறை​யால் தெலங்​கானாவில் தற்​போதுள்ள 17 நாடாளு​மன்ற தொகுதி​கள் 26-ஆக அதி​கரிக்​கும். இவ்​வாறு கே.டி.ராமாராவ் தெரி​வித்​துள்​ளார்.

தேசி​ய​வாத காங்​கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முடிவு
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு: டெல்லியில் அமித்ஷா - கனிமொழி ஆலோசனை

X