

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் முதல் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபராக சோனியா காந்தி உள்ளார். 2-வது நபராக ராகுல் உள்ளார்.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் கட்சியினர் தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். காந்தி குடும்பம் பொய், ஏமாற்று வேலை மற்றும் தவறான பிரச்சாரத்தின் மீதே வாழ்கிறது. மேலும் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கார்கேவும் பவன் கெராவும் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.