தேசிய அன்னையாக பசுவை அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தில் முஸ்லிம் பிரமுகர் கடிதம்

தேசிய அன்னையாக பசுவை அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தில் முஸ்லிம் பிரமுகர் கடிதம்
Updated on
1 min read

லக்னோ: பசுவை தேசிய அன்​னை​யாக அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு சமாஜ்​வாதி கட்​சி பிரமுகர் ஜீஷன் அன்​சாரி தனது ரத்​தத்​தில் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

வாராணசி​யில் உள்ள மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​திற்கு வெளியே அன்​சாரி இக்​கடிதத்தை எழு​தி​னார். பின்​னர் உள்​ளூர் நிர்​வாகம் மூலம் அதை பிரதமருக்கு அனுப்​பி​யுள்​ளார்.

இது குறித்து செய்​தி​யாளர்​களிடம் ஜீஷன் அன்​சாரி கூறிய​தாவது: "நான் முஸ்​லிம் சமூகத்​தைச் சேர்ந்​தவன். அதனால்​தான் இந்த முயற்​சியை எடுத்​துள்​ளேன். பசு குறித்து பாஜக தலை​வர்​கள் தொடர்ந்து வெவ்​வேறு கருத்​துகளை கூறி வரு​கின்​றனர்.

பசுவை ‘தேசிய அன்னை' என்று அறி​விப்​ப​தன் மூலம் பாஜக தனது நிலைப்​பாட்டை தெளிவுபடுத்த வேண்​டும். நாடு முழு​வதும் உள்ள மக்​களின் உணர்​வு​களில் பசுவுக்கு ஒரு தனி இடம் உள்​ளது. பசுவுக்​கான கலாச்​சார மற்​றும் மத முக்​கி​யத்​து​வத்தை அதி​காரப்​பூர்​வ​மாக அங்​கீகரிக்​கும் வகை​யில், அதை ‘தேசிய அன்னை' என்று அறிவிக்க மத்​திய அரசை வலி​யுறுத்​து​வதே எனது கடிதத்தின் நோக்​கம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

தேசிய அன்னையாக பசுவை அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தில் முஸ்லிம் பிரமுகர் கடிதம்
‘வாய்ஸ் மெசேஜ்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in