பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டால் இல்ல திருமண விழாவில் எம்.பி.க்கள் கங்கனா, மஹுவா, சுப்ரியா நடனம்

பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டால் இல்ல திருமண விழாவில் எம்.பி.க்கள் கங்கனா, மஹுவா, சுப்ரியா நடனம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற திருமண விழாவில் எம்பிக்கள் கங்கனா ரணாவத், மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் ஒன்றாக நடனமாடினர்.

பிரபல தொழில் அதிபரும் பாஜக எம்பியுமான நவீன் ஜிண்டாலின் ஒரே மகள் யஷாவணி ஜிண்டாலின் திருமணம் கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் இரவு இசைக் கச்சேரி நடைபெற்றது.

அப்போது பாஜக எம்பி கங்கனா ரணாவத், திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் ஒன்றாக சேர்ந்து நடனமாடினர். அவர்களோடு இணைந்து நவீன் ஜிண்டாலும் நடனமாடினார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் இடம்பெற்ற தீவாங்கி தீவாங்கி பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் ஒரே மேடையில் நடனம் ஆடியதை சமூக வலைதளவாசிகள் வரவேற்று உள்ளனர்.

பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டால் இல்ல திருமண விழாவில் எம்.பி.க்கள் கங்கனா, மஹுவா, சுப்ரியா நடனம்
பெங்களூரு த‌மிழ்ப் புத்தகத் திருவிழாவில் விஞ்ஞானி டில்லி பாபுவின் ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ நூல் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in