பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக ஆலோசனை
பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய கிழக்கில் போர் பதற்​றத்தை தணிப்​பது தொடர்​பாக பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல்நயான், குவைத் பட்​டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோ​ருடன் தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரானுடன் மோடி நேற்று தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில், ‘மத்திய கிழக்கு நில​வரம் குறித்து பிரான்ஸ் அதிபருடன் கலந்து பேசினேன். அங்கு பதற்​றத்தை தணிக்க வேண்​டும்.

போரை நிறுத்த அமை​திப் பேச்​சு​வார்த்​தை, ராஜ்ஜியரீ​தி​யான நடவடிக்​கைகளை தொடங்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தினேன். அங்கு அமை​தியை ஏற்​படுத்த நானும், பிரான்ஸ் அதிபரும் ஒன்​றிணைந்து செயல்​படு​வோம்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிம் உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓமன் நாட்​டின் சுல்​தான் ஹைதம் பின் தாரிக் உடனும் மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இது குறித்து அவர் வெளி​யிட்ட வலைதளப் பதி​வில், ‘ஓமன் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல்​களை இந்​தியா வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.

ஓமனில் வசிக்​கும் இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்​ததற்​காக சகோ​தரர் ஹைதம் பின் தாரிக்​குக்கு நன்றி தெரி​வித்​தேன். மத்திய கிழக்கில் அமை​தியை ஏற்​படுத்​து​வது குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினோம். ஹார்​முஸ் ஜலசந்​தியில் தடையற்ற கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய இந்​தி​யா​வுடன் ஓமனும் உறு​துணை​யாக செயல்​படும்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி​யின் சமரச முயற்சி அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் நாடு​களு​டன் இந்​தியா நல்​லுறவை பேணி வரு​கிறது. இதன்​படி

இரு தரப்​பிலும் பிரதமர் மோடி​யால் மட்​டுமே ராஜ்ஜியரீ​தி​யில் பேச்​சு​வார்த்தை நடத்த முடி​யும் என்று சர்​வ​தேச அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

“இந்​தியா மிகப்​பெரிய நாடு. இஸ்​ரேல், ஈரான் தலை​வர்​களு​டன் பிரதமர் மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னால் போரை நிறுத்த முடி​யும்” என்று இந்​தி​யா​வுக்​கான ஐக்​கிய அரபு அமீரக முன்​னாள் தூதர் ஹசன் மிர்ஸா தெரி​வித்​தார். இதையடுத்து, பிரதமர் மோடி சமரச முயற்சியை தொடங்​கியுள்ளார். இதன் ஒரு பகு​தி​யாகவே பல நாட்டு தலை​வர்​களு​டன் அவர் பேச்​சு​வார்த்தை நடத்​தி வருவதாக அரசி​யல்​ நோக்​கர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி தேவை: பென்டகன் கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in