மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் விசாரணை

எம்எல்ஏ.க்கள் போலி கையெழுத்து விவகாரத்தில் அதிரடி
மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் விசாரணை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தலில் 80 இடங்களில் மட்​டுமே திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்சி) வெற்றி பெற்​றது. இந்​நிலை​யில் கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற டிஎம்சி எம்எல்​ஏ.க்கள் கூட்​டத்​தில் 70 பேர் பங்​கேற்​ற​தாக மம்தா சமர்ப்பித்த ஆவணத்​தில், பல எம்​எல்​ஏ.க்​களின் கையெழுத்​துகள் போலி​யாக போடப்பட்டதாக புகார் எழுந்​தது.

இதுதொடர்​பாக கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான அபிஷேக் பானர்​ஜி​யின் இல்​லத்​துக்கு கடந்த வாரம் சென்ற சிஐடி அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தி​யிருந்​தனர். இந்​நிலை​யில் நேற்று மம்​தா​வின் வீட்​டுக்கு வந்த 5 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு​வினர் விசா​ரணை நடத்​தினர்.

இந்த வழக்கு விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக இது​வரை 13 டிஎம்சி எம்எல்​ஏ.க்​களிடம் சிஐடி போலீ​ஸார் வாக்​குமூலம் பெற்​றுள்​ளனர். அதில் 3 எம்​எல்​ஏ.க்​கள், கூட்​டப் புத்​தகத்​தில் இருப்​பது தங்​களது உண்​மை​யான கையெழுத்து இல்லை என தெரி​வித்​துள்​ளனர். மேலும், கேன்​னிங் பூர்பா தொகுதி எம்​எல்ஏ அந்தக் கூட்டத்திலேயே கலந்து கொள்​ள​வில்லை என்​றும் கூறி​யுள்​ளார். இது பரபரப்பை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

இதனைத் தொடர்ந்​து, மே 6-ம் தேதி நடந்த கூட்​டத்​தின் அசல் புத்தகத்​தைக் கொண்டு வந்து ஆஜராகு​மாறு அபிஷேக் பானர்ஜிக்கு சிஐடி உத்​தர​விட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

மம்தா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் விசாரணை
மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in