மத்திய பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு

மீனாட்சி நடராஜன்

மீனாட்சி நடராஜன்

Updated on
1 min read

போபால்: மாநிலங்​களவை​யில் காலி​யாக உள்ள 27 இடங்​களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் மத்​திய பிரதேசத்​தில் 3 இடங்​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது.

230 உறுப்​பினர்​ கொண்ட மாநில ​பேர​வை​யில் ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 58 வாக்​கு​கள் தேவை. பாஜக​விடம் 164, காங்​கிரஸிடம் 64 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இதனால் பாஜக 2, காங்​கிரஸ் ஓரிடத்தில் எளி​தாக வெல்ல முடி​யும். பாஜக பொதுச் ​செய​லா​ளர் தருண் சக், மாநிலசெய​லா​ளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாள​ர்களாக உள்​ளனர். பாஜக​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3-வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்​கப்​பட்டார்.

காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைத​ரா​பாத் நீதி​மன்​றத்​தில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்​பு மனு நிராகரிக்​கப்​பட்​டது. எனவே, பாஜக​வின் 3 வேட்​பாளர்​களும் போட்​டி​யின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

<div class="paragraphs"><p>மீனாட்சி நடராஜன்</p></div>
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்: 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in