அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஸ்டாலின் மற்றும் கேஜ்ரிவால்

ஸ்டாலின் மற்றும் கேஜ்ரிவால்

Updated on
1 min read

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “எனது அன்பிற்குரிய நண்பர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நிகழ்காலத்தைக் கடந்து சிந்திக்கும் உறுதியும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான மாற்றங்களாக உருவாக்கும் முனைப்பும் கொண்டவர்களால்தான் இந்தியாவின் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும்.

நமது மக்களின் ஆற்றல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன், துணிவோடும் தெளிவான நோக்கத்தோடும் உங்கள் விரிந்த பார்வையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ஸ்டாலின் மற்றும் கேஜ்ரிவால்</p></div>
மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in