

மும்பை: மும்பையைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவி சகானியை சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு சகானி அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் ஊசிக்கு பயந்த அச்சிறுமி, தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டாள். சில நாட்களில் அச்சிறுமி குணமடைந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிறுமியை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அச்சிறுமி உயிரிழந்தாள்.