அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி: அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி: அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். மொத்​த​மாக அதில் 297 அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன. அதி​முக.வின் முழு தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

வரிச் சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும். குல விளக்கு திட்​டத்​தின் கீழ் அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் குடும்​பத் தலை​வி​யின் வங்​கிக் கணக்​கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்​தப்​படும். மகளிரைப் போல​வே, ஆண்களுக்​கும் நகரப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். அம்மா இல்​லம் திட்​டம் மூல​மாக வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் விலை​யில்​லாமல் கட்​டித் தரப்​படும்.

மேலும், 100 நாட்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டம் 150 நாட்​களாக உயர்த்​தப்​படும். வேலைக்​குச் செல்​லும் 5 லட்​சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானி​யத்​துடன் இரு சக்கர வாக​னங்​கள் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர்​கள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். முதி​யோர், கணவனை இழந்​தவர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரமாக உயர்த்​தப்​படும், வங்​கி​களில் கல்விக் கடன் பெற்​றுத் திருப்​பிச் செலுத்த முடி​யாமல் உள்​ளவர்​களின் கடனை அரசே ஏற்​கும்.

நெல் ஆதார விலை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்​தப்​படும். சிறு, குறு விவ​சா​யிகளுக்கு உர மானிய​மாக ஆண்​டுக்கு எக்​டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கப்​படும். விவ​சாயப் பணி​யின் போது உயி​ரிழக்​கும் விவ​சா​யிகளின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​படும். வேலைக்​காகக் காத்​திருக்​கும் பட்​ட​தாரி இளைஞர்​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மற்​றும் பிளஸ் 2 முடித்​தவர்​களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்​கப்​படும். கைத்​தறி நெச​வாளர்​களுக்கு விலை​யில்லா மின்​சா​ரம் 450 யூனிட்​டாக​வும், விசைத்​தறிக்கு 1,400 யூனிட்டாக​வும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். பொங்​கல் தொகுப்​புடன் ரூ.1,000 ரொக்​கம் வழங்​கப்​படும். அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு குளிர்​சாதனப் பெட்டி (பிரிட்​ஜ்) விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் உயி​ரிழக்​கும் வீரர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும். கல்வி மற்​றும் மருத்து​வம் ஆகிய துறை​களைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநிலப் பட்​டியலுக்கு மாற்ற வலி​யுறுத்​தப்​படும். மத்​திய வரி வசூலில் செஸ் மற்​றும் கூடு​தல் வரி ஆகிய​வற்​றைப் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் சேர்க்க வலி​யுறுத்​தப்​படும். இது​போன்று 297 வாக்​குறு​தி​கள் அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன.

தேர்​தல் அறிக்கை வெளி​யிட்ட பின், செய்​தி​யாளர்​களிடம் பழனி​சாமி கூறும்போது, ‘‘கூட்​ட​ணி​யில் உள்ள சிறிய கட்​சிகளுக்​கான தொகு​திப் பங்​கீடு விரை​வில் இறுதி செய்​யப்​படும். மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தவுடன் நிதி ஆதா​ரங்​களைப் பெருக்​கி, மக்​கள் நலத்​திட்​டங்​கள் தொய்​வின்​றிச் செயல்​படுத்​தப்​படும். அதி​முக மீண்​டும் ஆட்​சிப் பொறுப்​பேற்​றதும் தமிழகத்​தில் மதுக்​கடைகள் படிப்​படி​யாகக் குறைக்​கப்​படும். அரசி​யல் சூழலுக்​குத் தகுந்​த​வாறு​தான் கூட்​ட​ணி​கள் அமைக்​கப்​படு​கின்​றன. அந்​தந்​தக் கட்​சிகளின் பலத்​துக்​கு ஏற்​பவே தொகு​தி​கள்​ ஒதுக்​கீடு செய்​யப்​படு​கின்​றன” என்று தெரிவித்​தார்​.

அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி: அரிசி கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ் உட்பட பல திட்டங்கள் அறிவிப்பு
IPL 2026 சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in