

புதுடெல்லி: புதிய ஊரக வேலை உறுதி மசோதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதன்பின் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசும்போது, “விபி-ஜி ராம் ஜி மசோதா கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்வதுடன் மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும்.
மேலும், கிராமங்களின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதுடன், கிராமங்களை வறுமையில் இருந்து விடுவித்து அவற்றின் வளர்ச்சிப் பயணத்துக்கு வலுவூட்டும்’’ என்றார்.