கடற்படையின் திறனை உயர்த்த ரூ.19,000 கோடி மதிப்பிலான புதிய கப்பல்களை தயாரிக்கும் திட்டம்

அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
கடற்படையின் திறனை உயர்த்த ரூ.19,000 கோடி மதிப்பிலான புதிய கப்பல்களை தயாரிக்கும் திட்டம்
Updated on: 
1 min read

விசாகப்பட்டினம்: இந்தியக் கடற்படை​​யின் திறனை அதிகரிக்கும் வித​மாக ரூ.19,000 கோடி மதிப்​பிலான புதிய ஆதரவு கப்பல்களை தயாரிக்​கும் திட்​டத்தை பாது​காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விசாகப்​பட்​டினத்​தில் தொடங்கி வைத்​தார்.

இந்தியக் கடற்படை​யின் ஆற்​றலை அதி​கரிக்க பாது​காப்​புத் துறை பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, ரூ.19,000 கோடி செல​வில் உரு​வாக்​கப்​பட்டு வரும் 5 ‘ஃப்​ளீட் சப்​போர்ட்’ ரக ஆதர​வுக் கப்​பல்​களில் முதலா​வது உள்​நாட்​டுக் கப்​பலான ‘சூர்​யா’ செவ்​வாய்க்​கிழமை முறைப்​படி கடலில் இறக்கி தொடங்கி வைக்​கப்​பட்​டது.

விசாகப்​பட்​டினத்​தில் உள்ள அரசு பொதுத்​துறை நிறு​வன​மான இந்​துஸ்​தான் ஷிப்​யார்ட் தளத்​தில் நேற்று நடை​பெற்ற இதற்​கான நிகழ்ச்​சி​யில் மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்​து​கொண்டு கப்​பல் சேவையை தொடங்கி வைத்​தார். கடற்​படைத் தலை​வர் அட்​மிரல் கிருஷ்ணா சுவாமி​நாதனும் இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார்.

225 மீட்​டர் நீள​மும் 32 மீட்​டர் அகல​மும் கொண்ட இந்த ஆதர​வுக் கப்​பல், நடுக்​கடலில் இயங்​கும் இந்​தி​யப் போர்க்​கப்​பல்​களுக்​குத் தேவை​யான எரிபொருள், குடிநீர், ஆயுதங்​கள் மற்​றும் பிற அத்​தி​யா​வசி​யப் பொருட்​களை உடனுக்​குடன் விநி​யோகிக்​கப் பயன்​படும். இதன் மூலம் போர்க்​கப்​பல்​கள் மீண்​டும் துறை​முகத்​துக்கு திரும்ப வேண்டி இருக்​காது. இதனால் நீண்ட நாட்​கள் தொடர்ந்து கடலில் ரோந்​துப் பணி​யில் ஈடுபட முடி​யும். மேலும், மீத​முள்ள 4 கப்​பல்​களும் 10 மாத இடைவெளி​யில் ஒவ்​வொன்​றாகக் கடற்படையிடம் ஒப்​படைக்​கப்​படும் என்​றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் திறனை உயர்த்த ரூ.19,000 கோடி மதிப்பிலான புதிய கப்பல்களை தயாரிக்கும் திட்டம்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் அதிகரிக்கும் பெண் பயணிகள்: ‘வசூல் படி’ குறைந்ததால் தவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in