

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ‘ரெய்சினா பேச்சுவார்த்தை - 2026’ நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
கடந்த 1-ம் தேதி ஈரானின் ‘லாவன்’ கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியாவுக்குள் நுழைய அனுமதி கேட்டது. அந்தக் கப்பலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதன்பின்னர் சில நாட்கள் கழித்து அந்தக் கப்பல் கொச்சி துறைமுகத்துக்குப் பாதுகாப்பாக வந்தது. இது மனிதாபிமான உதவிதான். இதற்கும் புவிசார் அரசியலுக்கும் தொடர்பில்லை. அமெரிக்க தாக்குதலில் தேனா கப்பல் சிக்கி கொண்டது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.