

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை மற்றும் நலன் குறித்து அறிந்து கொள்ள இந்தியா அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளியுறவுச் செயலாளர், வெளியுறவு அமைச்சக குழுவினர் மற்றும் காத்மாண்டு, பெய்ஜிங் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் தூதர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினேன்.
இந்த விவகாரத்திலும் நிவாரண நடவடிக்கைகளிலும் நேபாள அரசுத் தரப்புடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் 3 உடல் மீட்பு: நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லைதாண்டி இந்தியா வந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் காண்டக் நதியில் இருந்து, 2 பெண்கள் உட்பட 3 சடலங்களை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டனர்.