மக்களவையில் கடும் அமளிக்கு இடையே சுரங்கங்கள், கனிமங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே சுரங்கங்கள், கனிமங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்​றும் கூச்​சல் குழப்​பத்​துக்கு இடையே ‘சுரங்கங்கள் மற்​றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்​றும் ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026’ எந்​த​வித விவாத​முமின்றி நேற்று மக்களவையில் நிறைவேற்​றப்​பட்​டது.

மக்​களவை​யில் வெளி​நாட்​டுப் பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோ​தா, 2026-ஐ திரும்​பப் பெறக் கோரி​யும், நீட் போராட்​டம் குறித்து விவா​திக்க வலி​யுறுத்​தி​யும் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று அவை​யின் மையப்​பகு​திக்​குச் சென்று முழக்​கங்​களை எழுப்​பித் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவைக்கு தலைமை தாங்​கிய ஜெக​தாம்​பிகா பால், உறுப்​பினர்​களைத் தங்கள் இடங்​களுக்​குச் சென்று அமைதி காக்​கு​மாறு கேட்டுக்கொண்​டார்.

எனினும் அமளி அடங்​காத​தால், சுரங்​கங்​கள் மற்​றும் கனிமங்​கள் (வளர்ச்சி மற்​றும் ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026 எந்​த​வித விவாதங்​களும் இன்றி நிறைவேற்​றப்​பட்​டது. முன்​ன​தாக, வெளி​நாட்​டுப் பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோ​தாவை நாடாளு​மன்​றக் கூட்​டுக் குழு​வின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப மத்​திய அரசு கொண்டு வந்த தீர்​மானம் மக்​களவை​யில் ஏற்றுக்கொள்ளப்பட்​டது.

இந்த கூட்​டுக்​குழு​வில் மக்​களவையைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும், மாநிலங்​களவையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் இடம்​பெறு​வார்​கள் என்​றும், 2026 குளிர்​காலக் கூட்​டத்​தொடரின் முதல் வாரத்​தின் கடைசி நாளுக்​குள் இக்​குழு தனது அறிக்​கை​யைச் சமர்ப்​பிக்​கும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டது.

நீட் விவாதத்​துக்கு அரசு தயார்

அமைச்​சர் கிரண் ரிஜிஜு பேசுகை​யில், “நீட் தேர்வு தொடர்பான மாணவர்​கள் போராட்​டம் குறித்து உடனடி​யாக விவா​திக்க மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சபா​நாயகருக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ளார். அரசு மற்​றும் 80 சதவீத உறுப்​பினர்​கள் விவாதத்​துக்​குத் தயா​ராக இருக்​கிறோம்” எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் கேட்காததால் அவை நடவடிக்​கைகள்​ ஒத்திவைக்கப்​பட்டன.

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே சுரங்கங்கள், கனிமங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
“நீங்கள் இல்லாமல் என்ன செய்யப்போகிறேன்” - தந்தையின் நினைவுகளை பகிர்ந்த மெஸ்ஸி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in