கால்பந்து விளையாடிய மேகாலயா எம்.பி. உயிரிழப்பு

கால்பந்து விளையாடிய மேகாலயா எம்.பி. உயிரிழப்பு
Updated on
1 min read

ஷில்லாங்: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலுள்ள கால்பந்து மைதானத்தில் 5 பேர் விளையாடக் கூடிய புட்சால் கால்பந்து விளையாட்டை ஷில்லாங் தொகுதி எம்.பி. ரிக்கி ஆண்ட்ரூ நேற்று முன்தினம் விளையாடினார்.

அப்போது மைதானத்தில் அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அவரது நண்பர்கள் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மேகாலயா முதல்வர் கான்ராட் கே.சங்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரிக்கி ஆண்ட்ரூ உயிரிழந்ததைத் தொடர்ந்து நேற்று மேகாலயா பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கால்பந்து விளையாடிய மேகாலயா எம்.பி. உயிரிழப்பு
T20 WC 2026: சூப்பர் 8 குரூப் 1-ல் தோல்வியடையாத அணிகள்: இந்தியாவுக்கு சவாலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in