வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு

வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் உள்ள ஞான​வாபி மசூ​தி, மது​ரா​வின் ஷாஹி ஈத்கா மசூ​தி, சம்​பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்​கும் இடம் தொடர்​பான வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த வழக்​கு​களை மத்​தி​யஸ்​தம் மூலம் தீர்த்​துக் கொள்ள வேண்டும் என்று நீதி​மன்​றம் பரிந்​துரை செய்​தது. ஆனால், இந்த வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தின் மூலமே தீர்க்​கப்பட வேண்​டும் என்று 3 வழக்​கு​களி​லும் சம்​பந்​தப்​பட்ட முஸ்​லிம்​கள் தெரிவித்​து​விட்​டனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி ஞான​வாபி மசூதி தரப்பு வழக்​கறிஞர் அக்​லாக் அகமது கூறுகை​யில், “மத்​தி​யஸ்​தம் என்​பது மசூ​தியை இந்து தரப்​பினரிடம் ஒப்​படைப்​ப​தையே குறிக்​கும். எனவே, அதன் மூலம் இந்​தப் பிரச்​சனைக்​குத் தீர்வு காண வாய்ப்​பில்​லை. இதை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் கூறி​விட்​டேன்.

இந்து தரப்​பினர் கூறு​வது போல இடிக்​கப்​பட்ட எந்​தவொரு கோயிலின் இடத்​தி​லும் இந்த மசூதி கட்​டப்​பட​வில்​லை. இதனால், மசூ​தி​யை​யும் அதன் நிலத்​தை​யும் எதிர்​தரப்​பினரிடம் ஒப்படைக்கும் கேள்வியே எழவில்​லை. எனவே, சட்​டப்​படி நீதிமன்றமே இந்த விவ​காரத்​தில் முடி​வெடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

அகில இந்​திய முஸ்​லிம் தனிச்​சட்ட வாரிய செய்​தித் தொடர்​பாளர் டாக்​டர் இலி​யாஸ் கூறிய​தாவது: கடந்த 1991ல் வழி​பாட்​டுத் தலங்கள் பாது​காப்​புச் சட்​டத்தை அப்​போதைய காங்​கிரஸ் அரசு இயற்​றியது. அதன் அடிப்​படை​யில், 2019-ல் பாபர் மசூதி வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்​புக்​குப் பிறகு, மசூ​தி​கள் உள்​ளிட்ட எந்​தவொரு வழி​பாட்​டுத் தலத்​தின் தன்​மை​யை​யும் மாற்றுவதற்கான மனுவை நீதி​மன்​றம் பரிசீலிக்க முடி​யாது.

கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி​யன்று வழி​பாட்​டுத் தலங்கள் எந்த நிலை​யில் இருந்​தனவோ, அதே நிலை தொடர வேண்​டும். அதை மாற்ற முடி​யாது என்று அந்​தத் தீர்ப்​பில் கூறப்பட்​டுள்​ளது. எனவே, வழி​பாட்​டுத் தலங்​கள் சட்​டம், உச்ச நீதிமன்ற தீர்ப்​பின்​படி, ஒரு சொத்து மசூ​தி​யாக இருந்​தால், அதன் மீது உரிமை கோரு​வதற்கோ அல்​லது அதன் மதத் தன்​மையை மாற்​று​வதற்கோ நீதி​மன்​றத்​தில் முறை​யிட முடி​யாது.

எனினும், மசூ​தி​களின் மதத் தன்​மையை மாற்​றக் கோரும் இந்து மனுதாரர்களின் மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் அனு​ம​தித்து வருகிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சம்​பல் ஷாஹி ஜமா மஸ்​ஜித் வழக்​கில் ஆஜராகும் வழக்​கறிஞர் காசிம் ஜமால், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறுகை​யில், “பேச்​சு​வார்த்தை மூலம் தீர்வு காண்​ப​தற்​கான கேள்வியே எழவில்லை. ஏனெனில், எதிர்தரப்​பினருக்கு மசூதி மீது சட்​ட ரீதியான அல்​லது வேறு எந்த வகையி​லான உரிமை​யும் இல்​லை.

அனைத்து ஆதார ஆவணங்​களும் மசூ​திக்​குச் சாதக​மாகவே உள்ளன. துர​திருஷ்ட​வச​மாக நீதி​மன்​ற​மும் அவர்​களின் ஆதாரமற்ற மனுவை வி​சா​ரணைக்கு ஏற்​றுக் கொண்​டுள்​ளது. இது நீதித்​துறை நடை​முறையைத் தவறாகப் பயன்​படுத்​தி மசூ​தி​யின்​ ஒரு பகு​தி​யை ஆக்​கிரமிப்​ப​தற்​கான முயற்​சி” என்​றார்.

வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் பெங்களூருவில் 8 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in