உ.பி.யில் ஓடும் ரயிலில் மதுரா துறவி மீது தாக்குதல்

ஜோதிர்மட சங்கராச்சாரியர் மீது போக்ஸோ பாய காரணமானவர்
தாக்குதலுக்கு உள்ளான துறவி.

தாக்குதலுக்கு உள்ளான துறவி.

Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலின் கழிவறையில் மதுரா துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கப்பட்டு அவரது மூக்கறுக்கப்பட்டது. இவர், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்ஸோ வழக்கு பதிவாகக் காரணமானவர்.

பிரயாக்ராஜ் செல்ல கடந்த சனிக்கிழமை இரவு காஜியாபாத்தில் ரீவா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் அவர் கழிவறைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் துறவி அசுதோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முகச்சவரக் கத்தியில் துறவியின் மூக்கை அறுத்து நிலைகுலையச் செய்துள்ளனர்.

இதனால், கவுசாம்பி ரயில் நிலையத்தில் இறங்கிய துறவி அசுதோஷ், காவல்நிலையத்தில் புகார் செய்தார். தனது புகாரில் அவர் மதுராவைச் சேர்ந்த துறவியான தினேஷ் ஃபலாஹரி மற்றும் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் ஆகியோர் உத்தரவால் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது புகாரில் துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி குறிப்பிடுகையில், “தன் ஆசிரமங்களில் சமஸ்கிருதம் கற்கும் இரண்டு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவிமுக்தேஷ்வராணந்த் மீது நான் வழக்குப் பதிவு செய்திருந்தேன். இது அவரது தீவிர ஆதரவாளரான ஃபலாஹரியை கோபப்படுத்தியது.

இதன் காரணமாக அவர் என் மூக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு அறிவித்தார். இதையடுத்து என் மீது இந்தத் தாக்குதல் நடத்தி எனது மூக்கை அறுத்துள்ளனர். நான் எப்படியோ தாக்கியவரை தள்ளிவிட்டு குளியலறையில் என்னைப் பூட்டிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

பிரயாக்ராஜுக்கு செல்ல காசியாபாத்திலிருந்து ரீவா எக்ஸ்பிரஸில் ஏறினேன். ரயில் கவுசாம்பியை நெருங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 5 மணியளவில் நான் கழிப்பறைக்குச் சென்றேன். நான் வெளியே வந்தவுடன், ஒரு நபர் என்னைத் தாக்கி, சவரக்கத்தியால் என் மூக்கை அறுக்க முயன்றார்.” என்று அவர் கூறினார்.

துறவி அசுதோஷின் புகாருக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய துறவி ஃபலாஹரி, “அசுதோஷ் பிரம்மச்சாரி ஒரு குற்றவாளி மற்றும் வக்கிரமானவர். அவர் ஏற்கெனவே உ.பி.யின் ஷாம்லியில் 106 பேர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து பணம் பறித்துள்ளார். இரண்டு குழந்தைகளைத் தானே தாக்கி, சங்கராச்சாரியாரை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

போக்ஸோ வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியர் அவிமுதேஷ்வரருக்கு உ.பி.யின் பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துள்ளது. இப்பிரச்சனையில் பெரும்பாலன உ.பி. துறவிகளின் ஆதரவு சுவாமி அவிமுக்தேஷ்வருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>தாக்குதலுக்கு உள்ளான துறவி.</p></div>
“சச்சினுடன் உரையாடினேன்...” - வெற்றி ரகசியம் சொல்லும் சஞ்சு சாம்சன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in