

குற்றவாளி முகமது ஷரீக்
பெங்களூரு: மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது ஷரீக்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2022-ல் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அந்த ஆட்டோவில் குண்டுடன் பயணித்த முக்கிய குற்றவாளி முகமது ஷரீக் (24) பலத்த தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள் முகமது ஷரீக்கிற்கு எதிராக 1200 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முகமது ஷரீக்கிற்கு கூட்டு சதி, சேதம் விளைவித்தல், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் குற்றங்களை இழைத்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.