பயணியின் செல்போனை பறிக்க முயன்றபோது கைகளை பிடித்துக் கொண்டதால் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நபர்

வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல்
பயணியின் செல்போனை பறிக்க முயன்றபோது கைகளை பிடித்துக் கொண்டதால் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நபர்
Updated on: 
1 min read

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் ஓடும் ரயி​லில் செல்​போன் திருடமுயன்ற நபரின் கைகளை ஜன்​னல் வழி​யாக பயணி​கள் பிடித்துக் கொண்​ட​தால், ரயிலுக்கு வெளியே மரண பீதி​யுடன் தொங்கிய நிலை​யில் சென்ற காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

பிஹார் மாநிலம், பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிவ்நாராயண்பூர் ரயில் நிலை​யத்​தில் இருந்து பயணி​கள் ரயில் ஒன்று இரு தினங்​களுக்கு முன்பு புறப்​பட்​டது. அப்​போது, ஜன்​னல் வழி​யாகப் பயணி ஒரு​வரின் செல்​போனை மர்ம நபர் ஒரு​வர் பறிக்க முயன்றார். இதையடுத்​து, ரயில் பெட்​டிக்​குள் இருந்த பயணி​கள் விரைந்து செயல்​பட்​டு, மர்ம நபர் தப்​பிச் செல்​வதற்கு முன்​பாக அவரது கைகளைப் பிடித்​துக் கொண்​டனர். ரயில் நகரத் தொடங்​கிய​போதும் அவரை விடா​மல் பிடித்​திருந்​த​தால், அந்த நபர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்​கிய நிலை​யில் இருந்​தார்.

உயிர் பிழைத்​தார்

ரயில் வேகம் எடுக்​கத் தொடங்​கியதும், அந்த நபர் தன்னை விடு​வித்​துக் கொள்ள மரண பீதி​யுடன் போராடி​னார். ரயில் நிலையத்தில் இருந்​தவர்​களும் இந்​தக் காட்​சி​யைப் பார்த்து பதறி துடித்​தனர். சிறிது தூரம் இழுத்​துச் செல்​லப்​பட்ட அந்த நபர், பின்னர் நடைமேடை​யில் விழுந்​தார்.

சிறிய காயங்​களு​டன் அவர் உயிர் பிழைத்​தார். இதையடுத்​து, அங்​கிருந்த ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் அவரைப் பிடித்து விசா​ரணை நடத்​தினர். ரயில் நிலை​யங்​களில் செல்​போன் திருட்டு முயற்​சிகளால் பயணி​கள் எதிர்​கொள்​ளும் ஆபத்​துகளை சுட்​டிக்​காட்​டும் வகை​யில் இந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி உள்​ளது.

இதற்​கிடையே, சந்​தேகத்​துக்​குரிய திருடர்​களைப் பிடிக்க முயற்சிக்​கும்​போது, தங்​களுக்​கும் மற்​றவர்​களுக்​கும் ஆபத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் செயல்​படு​வதைப் பயணி​கள் தவிர்க்க வேண்​டும். திருட்டு முயற்சி நடந்​தால், ரயில்வே ஊழியர்​கள் அல்லது ரயில்வே காவல் துறை (ஜிஆர்​பி), ரயில்வே பாது​காப்​புப் படை (ஆர்​பிஎப்) ஆகியோரிடம் புகார் அளிக்​கலாம்​ என ரயில்​வே நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

பயணியின் செல்போனை பறிக்க முயன்றபோது கைகளை பிடித்துக் கொண்டதால் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நபர்
ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த சிஜேபி நிர்வாகிகளுக்கு 5 நாள் நீதிமன்ற காவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in