உறவினருக்கு ஜாமீன் பெற சத்தீஸ்கர் மயானத்தில் நீதிபதி படத்துடன் மாந்திரீக பூஜை செய்தவர் கைது

உறவினருக்கு ஜாமீன் பெற சத்தீஸ்கர் மயானத்தில் நீதிபதி படத்துடன் மாந்திரீக பூஜை செய்தவர் கைது
Updated on
1 min read

பிலாஸ்பூர்: சத்​தீஸ்​கரில் உறவினருக்கு ஜாமீன் பெற, தலைமை நீதிபதி படத்​துடன் மயானத்​தில் மாந்திரீகம் செய்த நபர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சத்​தீஸ்​கர் மாநிலம் பிலாஸ்​பூர் மாவட்​டத்​தில் நடை​பெற்ற கத்திக்குத்து வழக்கு ஒன்​றில் பிரி​யான்ஷு போலே என்​பவரும் அவரது நண்​பர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். இவ்​வழக்​கில் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்த நிலை​யில், பிரி​யான்​ஷு​வின் மனு உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்​தது. ஆன்​லைனில் போலிச் சாமி​யார் ஒரு​வரின் வீடியோவை பிரி​யான்ஷு போலேவின் உறவின​ரான ரிஷிகேஷ் குமார் பார்த்​தார்.

மாந்​திரீக பூஜை செய்​தால் ஜாமீன் கிடைக்​கும் என்று அவர் நம்பினார். அதனால், தன்​னுடன் இருந்த மூவருடன் சேர்ந்து மயானத்​தில் பூஜை செய்​யத் திட்​ட​மிட்​டார். அதன்​படி, அவர்​கள் கடந்த வெள்​ளிக்​கிழமை மற்​றும் சனிக்​கிழமைக்கு இடைப்​பட்ட நள்​ளிர​வில் சீபத் காவல் எல்​லைக்​குட்​பட்ட தேவாரி கிராம மயானத்​துக்​குச் சென்​றனர். அங்கு சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, பிரி​யான்ஷு மற்​றும் பாதிக்கப்​பட்​ட​வரின் புகைப்​படங்​களை வைத்​தனர்.

அதனுடன் மீன், எலுமிச்​சம்​பழம் மற்​றும் குங்​குமம் ஆகிய​வற்றை வைத்து மாந்​திரீகச் சடங்கு செய்​யத் தொடங்​கினர். மயானத்​தில் நள்​ளிர​வில் சந்​தேகப்​படும்​படி நின்​றவர்​களைக் கிராம மக்​கள் தட்​டிக்​கேட்​டனர். அப்​போது ரிஷி கேஷுடன் வந்த மூவர் தப்பியோட, ரிஷிகேஷ் மட்​டும் கையும் களவு​மாக மாட்டிக்கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்​துக்கு வந்த பிலாஸ்​பூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ரஜனேஷ் சிங் தலை​மையி​லான காவல் துறையினர், ரிஷிகேஷ் குமாரைக் கைது செய்து மயானத்​தில் இருந்த மாந்​திரீகப் பொருட்​களைப் பறி​முதல் செய்​ததுடன், தப்பியோடிய மற்ற மூவரை​யும்​ தீவிர​மாகத்​ தேடி வரு​கின்​றனர்​.

உறவினருக்கு ஜாமீன் பெற சத்தீஸ்கர் மயானத்தில் நீதிபதி படத்துடன் மாந்திரீக பூஜை செய்தவர் கைது
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in