ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியவர் கைது

ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியவர் கைது
Updated on: 
1 min read

அனந்தபூர்: ஆந்​திர மாநிலம், அனந்​த​புரம் மாவட்​டம் ராப்​தாடு மண்​டலத்​தில் அரசு உயர்​நிலைப் பள்ளி உள்​ளது. நேற்று வழக்​கம்​போல் வகுப்​பு​கள் நடை​பெற்​றுக் ​கொண்டிருந்​த​போது, திடீரென இளைஞர் ஒரு​வர் எலக்ட்​ரிக் ரம்​பத்​துடன் 10-ம் வகுப்​பறைக்​குள் புகுந்​தார். அங்​கிருந்த 15 வயது மாணவியை கொடூரமாக வெட்​டி​விட்டு தப்​பியோடினார்.

இதில் படுகாயமடைந்த அந்த மாணவியை அனந்​த​பூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இளைஞர் தாக்​கியபோது தடுத்த மற்​றொரு மாணவியும் காயமடைந்து, அதே மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இது​குறித்​துப் பள்ளி நிர்​வாகம் ராப்​தாடு போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தது. அதன்​பேரில் சம்​பவ இடத்​துக்​குச் சென்ற போலீஸார் கொலை முயற்​சிக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட ரம்​பத்தை பறி​முதல் செய்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய முதல்​கட்ட விசா​ரணை​யில், கொலை செய்ய முயன்ற நபர் ஹேமந்த் என்​ப​தும், அவர் மாணவிக்கு உறவினர் என்​ப​தும் தெரிய​வந்​தது. தன்​னைக் காதலிக்​கும்​படி ஹேமந்த் வற்​புறுத்​திய நிலையில் மாணவி மறுத்​துள்ளார்.

இதனால் ஆத்​திரமடைந்த அவர் கொலை செய்ய திட்​ட​மிட்​டது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீ​ஸார், ஹேமந்தை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

ஆந்திராவில் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியவர் கைது
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஹார்மர் பந்துவீச்சில் வென்றது தென் ஆப்பிரிக்கா

X