மேற்கு வங்க தேர்தலில் முக்கியப் பங்காற்றும் மன்றங்கள்: மானியத்தை உயர்த்திய மம்தாவுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு

மேற்கு வங்க தேர்தலில் முக்கியப் பங்காற்றும் மன்றங்கள்: மானியத்தை உயர்த்திய மம்தாவுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் உள்​ளூர் இளைஞர்​களை கொண்டும் பல்​வேறு விளை​யாட்​டு​கள் தொடர்​பாக​வும் கிளப்புகள் எனப்​படும் மன்​றங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. மேலும் காளி மற்​றும் துர்கா பூஜை குழுக்​களும் செயல்படுகின்றன.

இவை, அரசி​யல் கட்​சிகளின் பேரணி​கள் அல்​லது பிரச்​சார மேடைகளை விட மிக​வும் வலிமை​யான​தாக கருதப்​படு​கின்​றன. இவற்​றின் உறுப்​பினர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரங்​களில் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர். வாக்கு சேகரித்​தல், வாக்​காளர்​களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்​துச் செல்​லுதல் என தேர்​தல் களப்பணி​யாற்​றுகின்​றனர். ஒவ்​வொரு தெரு​வுக்​கும் அதன் சொந்த மன்​றங்​கள் உள்​ளன. ஒவ்வொரு மன்​றத்​துக்​கும் அதன் சொந்த செல்​வாக்கு உள்​ளது. இதனால், அவை மேற்கு வங்​கத்​தில் ஒரு ஆற்​றல்​மிக்க சமூக அரசியல் கட்​டமைப்​பாக உயர்ந்​துள்​ளன. இதன் காரண​மாக, பெங்​காலி வாக்​காளர்​கள் பெரும்​பாலும் தங்கள் கட்​சியை விட, தங்​கள் பகுதி மன்​றங்​களின் சொல்​லைத் தட்​டு​வ​தில்​லை.

எனவே ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக போன்ற முக்​கிய கட்​சிகள் இந்த மன்​றங்​களை தங்​கள் வெற்​றிக்கு வேராகக் கருதுகின்​றன. வங்​காளத்​தில் சுமார் 45,000 பதிவு செய்​யப்​பட்ட துர்கா பூஜை கமிட்​டிகள் உள்​ளன. இவை தவிர பதிவு செய்யப்படாத ஆயிரக்​கணக்​கான குழுக்​களும் செயல்படுகின்றன. கொல்​கத்தா நகரில் மட்​டும், சுமார் 3,000 பூஜை குழுக்​கள் உள்​ளன. பெரும்​பாலான பூஜை குழுக்​கள் ஏதேனும் ஒரு மன்​றத்​துடன் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

துர்கா பூஜைக்கு ரூ.1.1 லட்சம்: கடந்த 2011-ல் மம்தா பானர்ஜி முதன்​முறை​யாக ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து அவரது அரசு, அனைத்து மன்​றங்​கள் மற்​றும் குழுக்​களு​டன் நெருக்​க​மான தொடர்​பில் உள்​ளது. பல்​வேறு வகை நிதி​யுதவி​களை வசதிகளையும் மம்தா அரசு வழங்கி வரு​கிறது. துர்கா பூஜை குழுக்​களுக்கு மாநில அரசு வழங்​கும் வரு​டாந்​திர மானி​யம், கடந்த சில ஆண்​டு​களாக கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்டு விட்​டது. தொடக்​கத்​தில் ஒரு துர்கா பூஜை குழு​வுக்கு ரூ.25,000 என வழங்கப்பட்ட வரு​டாந்​திர மானி​யம், கடந்த ஆண்​டில் ரூ.1.10 லட்சமாக உயர்ந்​தது.

இது த​விர, மின்​சா​ரக் கட்​ட​ணத்​தில் தள்​ளு​படி​யும், பல்​வேறு அனும​தி​களுக்​கான கட்​ட​ணச் சலுகைகளும் தரப்​படு​கிறது. இது நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களின் செல​வு​களைக் குறைக்க உதவுகிறது. எதிர்க்​கட்​சி​யான பாஜக, தனது வாக்கு வங்​கியை வலுப்​படுத்​தும் உத்​தி​யாகக் கரு​தி, இந்த மானி​யங்​களை அடிக்​கடி விமர்​சித்து வரு​கிறது. எனவே, இந்​த​முறை மன்​றங்​கள் மற்​றும் குழுக்​களின் பலன் திரிண​மூல் காங்​கிரஸுக்​கு கிடைக்​கும்​ வாய்ப்​புகள்​ தெரிகிறது.

மேற்கு வங்க தேர்தலில் முக்கியப் பங்காற்றும் மன்றங்கள்: மானியத்தை உயர்த்திய மம்தாவுக்கு பலன் கிடைக்க வாய்ப்பு
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in