‘தேர்தல் ஆணையத்தை பாஜக இயக்குகிறது’ - பாஜக முத்திரை விவகாரத்தில் மம்தா குற்றச்சாட்டு

மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி

மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி

Updated on
1 min read

தேர்​தல் ஆணை​யத்தை பாஜக இயக்​கு​கிறது என்று மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி குற்​றம் சாட்டி உள்​ளார்.

கேரளத்​தில் வரும் ஏப்​ரல் 9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி தேர்​தல் ஆணை​யம் சார்​பில் அம்மாநில அரசி​யல் கட்​சிகளுக்கு அண்​மை​யில் ஓர் அறிக்கை அனுப்​பப்​பட்​டது. அதில் பாஜக​வின் முத்​திரை​யிடப்​பட்டு இருந்​தது.

இதுதொடர்​பாக மார்க்​சிஸ்ட் கட்சி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தேர்​தல் ஆணைய அறிக்​கை​யில் பாஜக முத்​திரை இருப்​பது மிக​வும் புது​மை​யாக இருக்​கிறது. பாஜக​வும் தேர்​தல் ஆணை​ய​மும் ஒரே முத்​திரையை பயன்​படுத்​துகிற​தா” என்று கேள்வி எழுப்​பப்​பட்டு உள்​ளது.

காங்​கிரஸ் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் பாஜக அலு​வல​கத்​தில் இருந்து செயல்​படு​கிறார்​களா? பாஜக​வின் முத்​திரை, தேர்​தல் ஆணை​யத்​துக்கு எவ்​வாறு கிடைத்​தது” என்று கேள்வி எழுப்​பப்​பட்டு இருக்​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக மேற்​கு​வங்க முதல்​வரும் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வரு​மான மம்தா பானர்​ஜி, பவானிபூரில் நேற்று கூறிய​தாவது: பூனைக்​குட்டி இப்​போது வெளியே வந்​து​விட்​டது. தேர்​தல் ஆணை​யத்தை பாஜகவே இயக்​கு​கிறது. தேர்​தல் ஆணைய அறிக்கை மூலம் இந்த உண்மை வெட்​ட​வெளிச்​ச​மாகி உள்​ளது.

எழுத்​தர் பிழை காரண​மாக தவறு நடந்​திருப்​ப​தாக தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது. இந்த விளக்​கம் ஏற்​கும்​படி​யாக இல்​லை. இதன் பின்​னால் மிகப்​பெரிய அரசி​யல் சதி இருக்​கிறது. தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடு​கள் கேள்விக்​குரிய​தாக இருக்​கின்​றன. இந்த விவ​காரம் தொடர்​பாக எதிர்க்​கட்​சிகள் ஓரணி​யில் திரண்டு போராட வேண்​டும். ஜனநாயகத்தை காப்​பாற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி</p></div>
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in