226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை

226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறு​வோம் என முதல்​வர் மம்தா பானர்ஜி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்​கத்​தில் 294 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அங்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது.

இந்​நிலை​யில், ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியின் (டிஎம்​சி) 291 வேட்​பாளர்​கள் பட்​டியலை அக்​கட்​சி​யின் தலை​வரும் முதல்​வரு​மான மம்தா பானர்ஜி கொல்​கத்​தா​வில் நேற்று வெளி​யிட்​டார்.

பின்​னர் மம்தா பானர்ஜி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ”மொத்தம் உள்ள 294 இடங்​களில், திரிண​முல் காங்​கிரஸ் 291 இடங்​களில் போட்​டி​யிடு​கிறது. மீத​முள்ள 3 இடங்​கள் டார்​ஜிலிங் மலைப்​ பகு​தி​யில் அனித் தாபா தலை​மையி​லான பிஜிபிஎம் (BGPM) கூட்​டணி கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. வேட்​பாளர் பட்டியலில் இடம் கிடைக்​காத தலை​வர்​கள் மற்​றும் தொண்டர்களுக்கு கட்​சி​யில் உரிய இடமும் பொறுப்​பும் வழங்கப்படும்.

இந்​தத் தேர்​தலில் பாஜக​வின் பலம் குறை​யும். அவர்​களின் மக்​கள் விரோதக் கொள்​கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்​பார்​கள். எங்கள் கட்சி 226-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்​கவைக்​கும்” என்​றார்.

291 பேர் கொண்ட வேட்​பாளர் பட்​டியலில் 52 பெண்​கள், 95 எஸ்​சி, எஸ்டி பிரி​வினர், 47 சிறு​பான்​மை​யினர் இடம்​பெற்​றுள்​ளனர். முதல்​வர் மம்தா பானர்ஜி கடந்த முறை போட்​டி​யிட்ட பவானிபூர் தொகு​தி​யில் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அவரை எதிர்த்து பாஜகவின் சுவேந்து அதி​காரி போட்​டி​யிடு​கிறார். இதனால் இருவருக்​கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்​புள்​ளது.

கடந்த 2021ல் நடந்​த தேர்​தலில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் போட்டியிட்ட மம்​தாவை, பாஜக சார்​பில் போட்​டி​யிட்​ட சுவேந்​து அதி​காரி தோற்கடித்​தார்​.

226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in