“முஸ்லிம்களை புறக்கணிக்கிறார் மம்தா” - திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் பேச்சு

“முஸ்லிம்களை புறக்கணிக்கிறார் மம்தா” - திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் பேச்சு
Updated on
1 min read

கொல்கத்தா: திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த மூத்த தலை​வர்​களுள் ஒரு​வ​ரான ஹுமாயூன் கபீர், முர்​ஷி​தா​பாத்​தில் பாபர் மசூதி கட்​டப் போவதாக அறி​வித்​த​தால் கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து அவர், ஆம் ஜனதா உன்​னாயன் என்ற பெயரில் புதிய கட்​சி​யைத் தொடங்கினார்.

இந்​நிலை​யில் ஹுமாயுன் கபீர் நேற்று அளித்த பேட்​டி: முஸ்​லிம்​களை பாது​காப்​போம் என்று கூறி ஆட்​சிக்கு வந்​தவர் முதல்​வர் மம்​தா. 3 முறை தொடர்ச்​சி​யாக ஆட்​சிக்கு வந்​த​போதும், அவர் முஸ்​லிம்​களுக்​காக எதை​யும் செய்​ய​வில்​லை. முஸ்​லிம் வாக்காளர்​களை அவர் புறக்​கணித்து வரு​கிறார்.

முஸ்​லிம்​களிட​மிருந்து வாக்​கு​களைப் பெற்று முதல்​வ​ரான பின்​னர், அவர் இந்​துக்​களுக்​கான கோயில்​களை மட்​டுமே கட்டி வரு​கிறார். ஜெகன்​னாத் தாம், ரஜார்​ஹட் பகு​தி​களில் கோயில்​கள் கட்​டி​னார் மம்​தா. தற்​போது ரஜார்​ஹாத் பகு​தி​யில் முஸ்​லிம்​களுக்​குச் சொந்​த​மான இடத்​தில் துர்கா கோயிலை கட்டி வரு​கிறார். இதைக் கேட்​டதற்​காக நான் கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​டேன்.

எனவே, நான் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யுடன் இணைந்து தேர்​தலில் களம் காண்​கிறேன். திரிண​மூல் காங்​கிரஸை​யும், பாஜகவை​யும் எதிர்த்​துப் போராடு​வேன். மம்தா பானர்​ஜியை மீண்​டும் ஆட்​சிக்கு வர விட​மாட்​டோம்.

தற்​போது பெண்​களுக்கு லஷ்மி பந்​தர் திட்​டத்​தின் கீழ் ரூ.1,500 வழங்​கப் போவ​தாக மம்தா அறி​வித்​துள்​ளார். நான் பெண்​களுக்​காக ரூ.3,500 வழங்​கு​வ​தாக வாக்​குறுதி அளித்​துள்​ளேன். எனவே, எனக்கு முஸ்​லிம் வாக்​காளர்​கள் பெரு​மள​வில் ஆதரவு தரு​வர். நாங்​கள் அமோக வெற்றி பெறு​வோம். இவ்​வாறு ஹுமாயுன் கபீர் தெரி​வித்​தார்.

“முஸ்லிம்களை புறக்கணிக்கிறார் மம்தா” - திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் பேச்சு
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in