யார் உண்மையான திரிணமூல் காங்கிரஸ்? - முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: ​யார் உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி என்ற பிரச்​சினைக்கு விரை​வில் முடிவு கட்​டுங்​கள் என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு மேற்கு வங்க முன்​னாள் முதல்​வர் மம்தா பானர்ஜி கடிதம் எழு​தி​யுள்​ளார்.

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப் பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி, 80 இடங்​களில் மட்​டுமே வென்று ஆட்​சி​யைப் பாஜக​விடம் பறி​கொடுத்​தது. வெற்றி பெற்ற 80-ல் 60 திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் அதிருப்தி குழு​வின் தலை​வர் ரித​பிரதா பானர்ஜி தலை​மை​யில் தனி அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

“நாங்​கள்​ தான் அதிக எண்​ணிக்​கையி​லான எம்​எல்​ஏ-க்​களைக் கொண்​டுள்​ளோம். எனவே, எங்​களை உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி என அறிவிக்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரித​பிரதா பானர்ஜி கடிதம் எழு​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி தேர்​தல் ஆணை​யத்​துக்கு நேற்று எழு​தி​ய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி நாங்​கள் ​தான். இதில் சிலர் தாங்​கள்​தான் உண்​மை​யானவர்​கள் என்று கட்​சியை சொந்​தம் கொண்​டாடி வரு​கின்​றனர்.

மேற்கு வங்கத்​தில் கலகம் விளை​விப்​ப​தற்​காக இத்​தகைய செயலை சிலர் செய்து வரு​கின்​றனர். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பெயர், கட்சி சின்​னம், கட்சி நிர்​வாகி​களின் கட்​டுப்​பாடு ஆகியவை தொடர்​பான விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் தனது முடிவை அறிவிக்க வேண்​டும்.

இந்​தப் பிரச்​சினை​யில் விளக்​கம் அளிக்​கு​மாறு தேர்​தல் ஆணையம் 2 முறை அவகாசம் அளித்து அறி​வுறுத்​தி​ய​ போதும் ரித​பிரதா பானர்ஜி விளக்​கம் அளிக்​க​வில்​லை. இதைத் தொடர்ந்து அனுப்​பிய கடிதத்​தில்

ஜூலை 25-ம் தே​தி வரை அவகாசம் வழங்க வேண்​டும் என்று கோரி​யிருக்​கிறார். தற்​போது ஜூலை 25-ம் தேதி​யும் கடந்துவிட்டது. ரித​பிரதா பானர்ஜி தனது விளக்​கத்தை சமர்ப்பித்தாரா இல்​லையா என்​பது குறித்து எங்​களுக்​குத் தெரிவிக்​கப்​பட​வில்​லை. ஒரு​வேளை அவர் பதிலளித்​திருந்​தால், அதன் நகல் எது​வும் எங்​களுக்கு வழங்​கப்​பட​வில்​லை.

கால அவகாசம் இரண்டு முறை நீட்​டிக்​கப்​பட்​டும் எதிர் தரப்​பினர் பதிலளிக்​கத் தவறி​யுள்​ளனர். எதிர்தரப்​பினருக்​குத் தொடர்ந்து கால நீட்​டிப்பு வழங்​கப்​படு​வது எங்​களுக்கு சந்​தேகத்தை எழுப்புகிறது.

அந்த கூடு​தல் கால அவகாசம் மூலம் அவர்​கள் தங்களுக்கு ஆதர​வான ஆவணங்​களை போலி​யாகத் தயாரிக்கலாம். இது தடுக்​கப்பட வேண்​டும். எனவே, இந்த விவகாரத்​தில் உடனடி​யாக தேர்​தல் ஆணை​யம் முடிவுக்கு வர வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>மம்தா பானர்ஜி</em></p></div>
ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in