ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மீது பாஜக எம்​.பி.​யும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான அனுராக் தாக்​குர் உரிமை மீறல் நோட்​டீஸை வழங்​கி​யுள்​ளார்.

மக்​களவை​யில் நடை​பெற்ற விவாதத்​தின்​போது வினாத்​தாள் கசிவு மற்​றும் இளைஞர்​கள் போராட்​டம் குறித்து ராகுல் காந்தி பேசும்​போது “தங்​களுக்கு எல்​லாமே தெரி​யும் என நினைப்பவர்கள் முட்​டாள்​கள்” என்று குறிப்​பிட்​டார். இது பாஜகவினரிடையே கடும் எதிர்ப்​பை​யும் அமளியை​யும் ஏற்படுத்தி​யது.

இந்​நிலை​யில் நேற்று மக்​களவை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் மற்​றும் அவம​திப்பு நோட்​டீஸை பாஜக எம்​.பி.அனு​ராக் தாக்​குர் சமர்ப்​பித்​தார். இந்த நோட்​டீஸ் மீது அவை​யில் இன்று (ஜூலை 31) விவாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உயர்​நிலைக் ​குழு அமைக்க கோரிக்கை:

இந்​நிலை​யில் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: டெல்லியில் போராட்​டம் நடத்​திய மாணவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​திய விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றக் கண்​காணிப்​பில் உயர்​நிலைக் குழு அமைத்து விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

தனது மற்​றொரு பதி​வில் ராகுல் காந்தி கூறி​யுள்​ள​தாவது: டெல்​லி போராட்​டத்​தில் மாணவர்​களுக்கு எதி​ரான வன்​முறை தொடர்பாக விளக்​கம் அளிப்​ப​தற்​காக நாடாளு​மன்​றத்​துக்கு வருவதற்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷா ஏன் இவ்​வளவு பயப்படுகிறார் ? மாணவர்​கள் மீது தடியடி, பெல்​லட் குண்​டு​கள் பிரயோகிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சர் அமித்ஷா பதவி வில​கவேண்​டும் என்று கோரிக்​கை வைக்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்.

<div class="paragraphs"><p><em>மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி</em></p></div>
மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு: கர்நாடக அரசின் முயற்சிக்குப் பின்னடைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in