மே.வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மே.வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்​தல் வெற்​றிக்கு பிறகு டெல்​லியை கைப்​பற்​று​வேன் என்று மம்தா பானர்ஜி கூறி​னார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு முதல்​கட்ட தேர்​தல் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதையடுத்து வரும் 29-ம் தேதி நடை​பெறும் இரண்​டாம் கட்ட தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் அனல் பறக்​கிறது. முதல் கட்டத் தேர்தலில் 92 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்​நிலை​யில் கொல்​கத்​தா​வின் சவுரிங்​கிப் பகு​தி​யில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் நேற்று நடை​பெற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது: பாஜக​வால் எங்​களை தோற்​கடிக்க முடி​யாது. நாங்​கள் அநீ​திக்கு எதி​ராகப் போராடு​கிறோம். எங்​கள் உரிமை​களுக்​காகப் போராடு​கிறோம். நான் வங்​கத்​தில் பிறந்​தேன். இந்த வங்​கத்​திலேயே என் இறுதி மூச்​சை​யும் விடு​வேன்.

வங்​கத்​தில் வெற்​றியை உறுதி செய்த பிறகு, நான் டெல்​லியை எனது கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரு​வேன். அனைத்து அரசி​யல் கட்​சிகளை​யும் ஒன்​றிணைப்​ப​தன் மூலம் நான் இதைச் செய்​வேன். எனக்கு அதி​காரப் பதவி தேவை​யில்​லை. டெல்​லி​யில் பாஜக முழு​மை​யாக தகர்க்​கப்​படு​வதையே நான் விரும்​பு​கிறேன். மேற்கு வங்​கத்​தில் அவர்​களின் அழிவு தவிர்க்க முடி​யாதது. என்​றாலும் டெல்​லியி​லிருந்​தும் பாஜக வெளி​யேற்​றப்பட வேண்​டும். இவ்​வாறு மம்தா ஆவேச​மாகப் பேசி​னார்.

இதுகுறித்து கொல்​கத்​தா​வில் இருந்து மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறுகை​யில், “வங்​காளத்​தில் மம்​தாவுக்கு என்று எது​வும் மிச்சமில்​லை. அவர் எப்​படி டெல்​லிக்​கு வரு​வார்​?” என்​றார்​.

மே.வங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு டெல்லியைக் கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்
பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in