8 திரிணமூல் தலைவர்கள் நீக்கம்: மம்தா பானர்ஜி நடவடிக்கை

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: கட்​சி ​விரோத நடவடிக்கை காரண​மாக திரிண​மூல் காங்​கிரஸின் 8 மூத்த தலை​வர்​கள் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்டு உள்​ளனர்.

மேற்கு வங்​க தேர்தல் தோல்விக்கு பிறகு திரிண​மூல் தலை​வர் மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் போர்க்கொடி உயர்த்தி உள்​ளனர். திரிண​மூலின் 28 எம்​பிக்​களில் 20 பேர் கட்​சி​யில் இருந்து விலகி என்​சிபிஐ கட்​சி​யில் இணைந்து உள்​ளனர். அவர்​கள் பகிரங்​க​மாக பாஜக​வுக்கு ஆதரவு தெரி​வித்து உள்​ளனர்.

இதனிடையே திரிண​மூல் காங்​கிரஸின் 80 எம்​எல்​ஏக்​களில் சுமார் 60 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாக செயல்​படு​கின்​றனர். ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் திரிண​மூலின் பெயர், சின்​னத்​துக்கு உரிமை கோரி வரு​கின்​றனர். இந்த சூழலில் ரிதப்​ரதா தலை​மையி​லான அதிருப்தி திரிண​மூல் தலைவர்​கள் கொல்​கத்​தா​வில் நேற்று முன்​தினம் அவசர ஆலோசனைக் கூட்​டத்தை நடத்​தினர். இதில் கட்​சித் தலை​வர் பதவி​யில் இருந்து மம்தா பானர்ஜி நீக்​கப்​பட்​டார். திரிண​மூல் காங்​கிரஸின் புதிய தலை​வ​ராக அருப் ராய் தேர்வு செய்யப்பட்டார். முக்​கிய நிர்​வாகி​களும் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இதைத் தொடர்ந்து கட்​சி​விரோத நடவடிக்​கை​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்டி திரிண​மூல் மூத்த தலை​வர்​கள் ஜாவித் அகமது கான், அருப் ராய், ரதின் கோஸ், பிப்​லப் மித்​ரா, சபீனா யாஸ்​மின், அருப் பிஸ்​வாஸ், சென்​ஹாசிஸ் சக்​கர​வர்த்தி உள்​ளிட்ட 8 பேரை மம்தா பானர்ஜி நேற்று கட்​சி​யில் இருந்து நீக்​கி​னார். அவர்​களின் பதவி​கள், பொறுப்​பு​களும் பறிக்​கப்​பட்​டன.

மம்தா தலை​மையி​லான திரிண​மூலின் தேசிய செயற்​குழு முழுமை​யாக மாற்றி அமைக்​கப்​பட்டு உள்​ளது. புதிய நிர்வாகிகளின் பெயர்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்​கப்​பட்டு உள்​ளது. இதே​போல அதிருப்​தி அணியினரும்​ தங்களது நிர்​​வாகி​கள்​ பட்​டியலை தேர்தல்​ ஆணையத்துக்​கு அனுப்​பியுள்​ளனர்​.

<div class="paragraphs"><p><em>மம்தா பானர்ஜி</em></p></div>
பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தைத் தருவோம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in