தலைமை தேர்தல் ஆணையரை பிப்.2-ல் சந்திக்கிறார் மம்தா

தலைமை தேர்தல் ஆணையரை பிப்.2-ல் சந்திக்கிறார் மம்தா
Updated on
1 min read

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழு, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை வரும் திங்கட்கிழமை மாலை சந்திக்க உள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் குழுவை சந்திக்க பிப்ரவரி 2ம் தேதி மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேரம் ஒதுக்கியுள்ளார்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து மம்தா பானர்ஜி சிங்கூரில் நேற்று முன்தினம் கூறுகையில், “இந்த திருத்தப் பணி என்பது பின் வாசல் வழியாக என்ஆர்சி-யை அமல்படுத்தும் முயற்சியாகும். யாரையும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இங்கு என்ஆர்சி-யை அமல்படுத்த விடமாட்டோம்” என்றார்.

தலைமை தேர்தல் ஆணையரை பிப்.2-ல் சந்திக்கிறார் மம்தா
“விஜய் யாருக்காக உச்சத்தில் இருந்து வந்துள்ளார்?” - பழனிசாமி கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in