“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” - சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று தக் ஷின் தினாஜ்பூர் வந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடனக் கலைஞர்களுடன் மம்தா கலந்துரையாடினார். படம்: பிடிஐ

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று தக் ஷின் தினாஜ்பூர் வந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடனக் கலைஞர்களுடன் மம்தா கலந்துரையாடினார். படம்: பிடிஐ

Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத் தடை விதிக்​கப்​படலாம் என்ற பிரச்​சா​ரத்தை முதல்​வர் மம்தா பானர்ஜி முன்​னெடுத்து வரு​கிறார்.

“நமது மாநிலத்​தில் பெரும்​பாலான வியா​பாரி​கள் சாலை​யோரங்​களில்​தான் மீன்​களை விற்க முடி​யும். இவர்​கள் ஆட்​சிக்கு வந்​தால், உரிமம் பெற்று ஷாப்​பிங் மால்​களில் மட்​டுமே விற்​பனை செய்ய முடி​யும். அது​போன்ற நிலை நமக்கு வேண்​டு​மா? எனவே, பாஜக ஆட்​சிக்கு வரக்​கூ​டாது. அதற்​காகவே, திரிண​மூல் காங்​கிரஸுக்கு மக்​கள் வாக்​களிக்க வேண்​டும்” என்று மம்தா பிரச்சாரம் செய்தார்.

இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​துக்கு சுற்​றுலாப் பயணி​கள் தாராள​மாக வரலாம் என்​றும், மீன் உணவு வகைகளை விரும்​பிச் சாப்​பிடலாம் என்​றும் திரிண​மூல் காங்​கிரஸ் அழைப்பு விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: மேற்கு வங்​கத்​துக்கு சுற்​றுலாப்பயணி​கள் வரலாம். அவர்​கள் மேற்கு வங்க மாநிலம் முழு​வதும் பரி​மாறப்​படும் சுவை​யான அசைவ உணவு​களை சாப்​பிடலாம்.

பிரபலான முரி கோண்​டா, பாப்டா மச்​சர் ஜல், லிஷ் பாப்​பா, சிங்ரி மலாய் கறி, பேட்கி படூரி, கோஷா மாங்ஷோ உள்​ளிட்ட உணவு வகைகளை நாங்​கள் பரிந்​துரைக்​கிறோம். நீங்​கள் மேற்கு வங்​கத்​தில் தங்​கும் நாட்​கள்​ இனிமை​யாக அமையட்​டும்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று தக் ஷின் தினாஜ்பூர் வந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடனக் கலைஞர்களுடன் மம்தா கலந்துரையாடினார். படம்: பிடிஐ</p></div>
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in