

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசீர்கட் அருகில் சந்தேஷ்காலி கிராமம் உள்ளது.
இங்கு மூசா மொல்லா என்பவர் மீன் வளர்ப்புக்காக நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மொல்லாவை கைது செய்வதற்காக போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்தேஷ்காலி சென்றபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மூசா மொல்லாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.