மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ராவுக்கு ரூ.122 கோடி சொத்து - சுப்ரியா சுலேவின் ரூ.167 கோடியை விட குறைவு

அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்

அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்

Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டிர துணை முதல்​வ​ராக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் விமான விபத்​தில் கால​மா​னார். இதனால் அவருடைய பாராமதி சட்​டப்​பேர​வைத் தொகுதி காலி​யானது.

அஜித் பவார் மறைவுக்​குப் பிறகு அவரது மனைவி சுனேத்ரா பவார் தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வ​ரா​னார். அத்​துடன் துணை முதல்​வ​ராக​வும் பொறுப்​பேற்​றார். இந்​நிலை​யில், பாராமதி தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்​தேர்​தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுனேத்ரா போட்​டி​யிடு​கிறார்.

சுனேத்ரா பவார் சமீபத்​தில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார். அதனுடன் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தின்​படி, அவருக்கு ரூ.122 கோடி மதிப்​பிலான சொத்​துகள் உள்​ளன. இதன்​மூலம் பவார் குடும்​பத்​தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட 2-வது நபராக இவர் உள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

பாராமதி மக்​களவை தொகுதி எம்​.பி.​யும் தேசி​ய​வாத காங்​கிரஸ் (எஸ்​பி) கட்​சி​யின் செயல் தலை​வரு​மான சுப்​ரியா சுலே ரூ.167 கோடி சொத்து மதிப்​புடன் முதலிடத்​தில் உள்​ளார். இது அவரது தந்தை​யும் அக்​கட்​சி​யின் தலை​வரு​மான சரத் பவாரின் சொத்து மதிப்பை விட (ரூ.61 கோடி) கிட்​டத்​தட்ட 3 மடங்கு அதி​கம்.

<div class="paragraphs"><p>அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்</p></div>
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in