திருமணம் செய்வதாக 14 பெண்களிடம் மோசடி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த மகாராஷ்டிரா குற்றவாளி நாடு கடத்தல்

திருமணம் செய்வதாக 14 பெண்களிடம் மோசடி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த மகாராஷ்டிரா குற்றவாளி நாடு கடத்தல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்​வ​தாகப் பொய்​யான வாக்குறுதி அளித்து 14 பெண்​களை ஏமாற்​றிய வழக்​கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது மாசின், ஐக்கிய அரபு அமீரகத்​தி​லிருந்து இந்தியா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளார்.

மகாராஷ்டிரா இளம்​பெண் ஒரு​வர், முகமது மாசின் என்​பவர் தன்னை திரு​மணம் செய்து​கொள்​வ​தாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்​றிய​தாக போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். மாசின், தன்னை பாலியல் ரீதி​யாகவும், மன ரீதி​யாகவும் துன்புறுத்தியதோடு ரூ.18 லட்​சத்தை வாங்கி மோசடி செய்ததாகவும் குறிப்​பிட்​டார்.

அதன் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி​யதில், மாசின் இதே பாணி​யில் மேலும் 13 பெண்​களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி, அவர்​களிட​மிருந்து பணம் பறித்ததுடன், அந்​தரங்க வீடியோக்​களை​யும் பதிவு செய்து மிரட்டியது தெரிய​வந்​தது.

இதையடுத்து, அவரை கைது செய்ய போலீ​ஸார் நட​வடிக்கை எடுத்​த​போது அவர் வெளி​நாட்​டுக்​குத் தப்​பிச் சென்​றார். மாசினை கண்​டு​பி​டித்​துக் கைது செய்ய சிபிஐ, மத்​திய வெளி​யுறவு அமைசகம் மற்​றும் உள்​துறை அமைச்​சகத்​திடம் மகாராஷ்டிர காவல்​துறை உதவி கோரியது. அதன் பேரில் சிபிஐ, டெல்​லி​யில் உள்ள தனது தேசிய மத்​திய பணி​யகம் மூலம், மாசினுக்கு எதிராக இன்​டர்​போல் ரெட் நோட்​டீஸை பிறப்​பித்​தது.

இதனிடையே, மாசின் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் பதுங்கி இருப்பது தெரிய​வந்​தது. இதனையடுத்து, ஐக்​கிய அரபு அமீரக அதி​காரி​கள் அவரது இருப்​பிடத்​தை்க் கண்​டறிந்து கைது செய்தனர். பின்​னர், உரிய சட்ட நடைமுறைகளின்​படி, அவரை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த ஒப்​புதல் அளித்​தனர். இதனையடுத்து, ஐக்​கிய அரபு அமீரகம் சென்ற மகாராஷ்டிரா காவல்​துறை​யின் தனிப்​படை​யினர், மாசினை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் எடுத்​தனர். பின்​னர், அவருடன் நேற்று இந்​தியா வந்​தடைந்​தனர்.

இந்த வழக்​கில் ஏற்​க​னவே நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​தி​ரிகை தாக்கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்த சிபிஐ அதி​காரி​கள், அடுத்​தகட்ட நட​வடிக்​கைகளை உடனடி​யாக தொடங்​கு​வ​தாக கூறினர்.

இந்த ஆண்​டில் 74 பேர்

வெளி​நாடுகளுக்​குத் தப்​பிச் செல்​லும் குற்​றவாளி​களைப் பிடிக்க சிபிஐ அமைப்பு ‘இன்​டர்​போல்’ மற்​றும் தனது ‘பாரத்​போல்’ கட்டமைப்பு மூலம் தீவிர நட​வடிக்கை எடுத்து வரு​கிறது. அந்த வகை​யில், 2019-ம் ஆண்டு முதல் இது​வரை 300-க்​கும் மேற்​பட்ட தேடப்​படும் குற்​றவாளி​கள் இந்​தி​யா​வுக்​குத் திரும்​பக் கொண்டு வரப்​பட்​டுள்​ளனர். இந்த ஆண்​டில் மட்​டும் 74 பேர் நாடு கடத்தப்பட்​டுள்​ளனர்.

திருமணம் செய்வதாக 14 பெண்களிடம் மோசடி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த மகாராஷ்டிரா குற்றவாளி நாடு கடத்தல்
‘ஒருமுறை’ தீபம் ஏற்ற அனுமதி: ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை கூறிய கருத்துகள் என்னென்ன?

X