உத்தராகண்ட் மதரஸா கல்வி வாரியம் ஜூலையில் மூடல்: சிறுபான்மை கல்வி ஆணையம் வசமாகிறது!

பிரதிநிதித்துவப் படம் 

பிரதிநிதித்துவப் படம் 

Updated on
2 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் மதரஸா கல்வி வாரியம் மூடப்பட உள்ளது. இதன் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட நிர்வாகத்தை இனி, அம்மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் சிறுபான்மை கல்வி ஆணையம் முடிவு செய்ய உள்ளது.

உத்தராகண்ட் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மதரஸாக்கள் அதிகம் உள்ளன. இவை, முகலாய மன்னர்கள் ஆட்சியில் துவங்கப்பட்ட முக்கியக் கல்வி நிலையங்களாகக் கருதப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் மதரஸாக்களுக்கு எனத் தனியாக ஒரு மதரஸா கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இது, மதரஸாக்களின் கல்வி திட்டங்களை நிர்ணயித்து வந்தது. இதேபோல், இதர கல்விகளுக்கும் தனியாக வாரியங்கள் செயல்படுகின்றன.

இச்சூழலில், உத்தராகண்டில் முதன்முதறையாக மதரஸா கல்வி வாரியம் ஜுலை முதல் மூடப்பட உள்ளது. இவற்றின் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட நிர்வாகத்தை இனி உத்தராகண்டில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள சிறுபான்மை கல்வி ஆணையம் முடிவு செய்ய உள்ளது. இதன்மூலம், மதரஸாக்காளில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் பொதுக்கல்வி முறையில் பாடங்கள் பயில்வார்கள் எனக் கருதப்படுகிறது.

இது குறித்து உத்தராகண்டின் சிறப்புச் செயலாளர் டாக்டர் பராக் மதுகர் தகாடேவின் கூறுகையில், ’ஜூலை 1, 2026 முதல் மதரசா வாரியத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில சிறுபான்மை கல்வி ஆணையம், இனி அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு நவீன மற்றும் தரமான பாடத்திட்டத்தை அமைக்கும். இந்த அனைத்து நிறுவனங்களும் இனி உத்தராகண்ட் கல்வி வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

இது, அரசு மாநிலத்தின் சிறுபான்மை கல்வி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும். இதன்மூலம், அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.

இது, முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. புதிய ஆணையத்தின் கட்டமைப்பு மிகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், கல்வி ரீதியாக வலுவானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பேராசிரியர் சுர்ஜித் சிங் காந்தி இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் பல்வேறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களான பேராசிரியர் ராகேஷ் குமார் ஜெயின், டாக்டர் சையத் அலி ஹமீத், பேராசிரியர் பெமா டென்சிங், பேராசிரியர் குர்மீத் சிங், டாக்டர் எல்பா மாண்ட்ரெலே, பேராசிரியர் ராபின் அமன், சந்திரசேகர் பட் மற்றும் ராஜேந்திர சிங் பிஷ்த் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், பள்ளிக் கல்வி உள்ளிட்ட மாநிலத்தின் சில அரசு அதிகாரிகளும் இந்த ஆணையத்தில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள். இது குறித்து உத்தராகண்டின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறும்போது, ’சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தரமான மற்றும் தொலைநோக்குக் கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஆணையம் இனி கல்வி வகை மற்றும் பாடத்திட்டத்தை நிர்ணயிக்கும். உயர் மட்ட அறிஞர்களை இந்த வாரியத்தில் நியமிப்பதன் நோக்கம், சிறுபான்மை மாணவர்களை நவீன போட்டிக்குத் தயார்படுத்தி, ஒரு கல்வி கட்டமைப்பை உருவாக்கும்.இது முழு அமைப்புக்கும் வெளிப்படைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டு வரும்.’ எனத் தெரிவித்தார்

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்&nbsp;</p></div>
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல் - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in