காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகல் - T20 WC 2026

ஹர்ஷித் ராணா

ஹர்ஷித் ராணா

Updated on
1 min read

மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

கடந்த 4-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பந்து வீசிய போது ஹர்ஷித் ராணா காயமடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். வலது முழங்கால் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் விளையாடுவதற்கான உடற்தகுதியை அவர் இழந்த காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ராணா அறிமுகமானார். இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அணியில் அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்.

<div class="paragraphs"><p>ஹர்ஷித் ராணா</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in