மீண்டும் தேர்தலில் வெற்றி: பிரேசில் அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர்  மோடி, பிரேசில் அதிபர் லூலா | கோப்புப்படம்

பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூலா | கோப்புப்படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: மீண்டும் பிரேசில் நாட்டு அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இனாசியோ லூலா டா சில்வா, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் முதல்கட்ட தேர்தலில் வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ போல்சனாரோ முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் அதிபர் லூலா வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஃப்ளாவியோ போல்சனாரோவை 4.4 மில்லியன் வாக்குகளில் வீழ்த்தினார் 80 வயதான லூலா. அவரது வெற்றியை பிரேசில் நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நண்பரும் பிரேசில் அதிபருமான லூலாவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான கூட்டுறவை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன். பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதமர்  மோடி, பிரேசில் அதிபர் லூலா | கோப்புப்படம்</p></div>
காப்பாற்றிய ரிவ்யூ: அபார சதமடித்த ஷதாப் கான் - இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in