நேருவின் சாதனையை முறியடித்தார் - நீண்ட காலம் பதவி வகித்த பிரதமரானார் மோடி

மலேசியா, இத்தாலி பிரதமர்கள் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து
நேருவின் சாதனையை முறியடித்தார் - நீண்ட காலம் பதவி வகித்த பிரதமரானார் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை முறியடித்​து, இந்​தி​யா​வில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்​தவர் என்ற பெரு​மையை நரேந்​திர மோடி நேற்று பெற்​றார்.

கடந்த 2014ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) வெற்றி பெற்​றது. இதையடுத்​து, அக்​கட்​சி​யின் நரேந்​திர மோடி அதே ஆண்டு மே 26ம் தேதி முதல் முறை​யாக பிரதம​ராக பதவியேற்றார். இதையடுத்​து, 2019 மற்​றும் 2024 ஆகிய தேர்தலிலும் என்​டிஏ வெற்றி பெற்​றதையடுத்​து, நரேந்​திர மோடி பிரதம​ராக தொடர்ந்து பதவி​யில் இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், பிரதமர் பதவி​யில் நரேந்​திர மோடி தொடர்ந்து 4,399 நாட்​களை நேற்று கடந்​தார். இதன் ​மூலம், மக்​களால் தேர்ந்தெடுக்​கப்​பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி​யில் இருந்தவர் என்ற, நாட்​டின் முதல் பிரதமர் ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்​துள்​ளார். இந்​தியா சுதந்​திரம் அடைந்த பிறகு நேரு பிரதம​ராக பொறுப்பேற்றார்.

எனினும், நாட்​டின் முதல் பொதுத் தேர்​தலுக்​குப் பிறகு 1952 மே 13ம் தேதி பிரதம​ராக பதவி​யேற்ற நேரு, மறை​யும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்​கள் பிரதம​ராக இருந்​தார் என்​பது குறிப்பிடத்தக்​கது. இதையடுத்​து, உள்​நாட்டு தலை​வர்​கள் மட்டுமல்​லாது, உலக தலை​வர்​கள் பலரும் நரேந்​திர மோடிக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் "இந்​திய பிரதமர் மோடி​யின் சாதனை, அவரது பல தசாப்த கால அர்ப்​பணிப்​புள்ள மக்​கள் சேவை மற்​றும் தலை​மைத்​து​வத்​துக்கு ஒரு சக்​தி ​வாய்ந்த சான்று ஆகும்" என்று கூறி​யுள்​ளார்.

அமெரிக்க செனட்​டர் ஜான் கோர்​னின் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “மூன்று ஜனநாயகத் தேர்​தல்​கள் மூலம் 140 கோடி மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெற்​று, இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிரதமர் என்ற சாதனை படைத்​துள்ள பிரதமர் மோடிக்கு நல்​வாழ்த்​துகள்" என்று பதி​விட்​டுள்​ளார்.

மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராஹிம் விடுத்​துள்ள வாழ்த்​துச் செய்​தி​யில், "வரலாற்​றுச் சிறப்​புமிக்க மைல்​கல்லை எட்​டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். இந்த சாதனை, இந்​தி​யா​வின் வளர்ச்​சி, செழுமை மற்​றும் உலக அரங்கில் அதன் நிலையை மேம்​படுத்​து​வ​தில் அவரது பல ஆண்​டு​கால அர்ப்​பணிப்​புள்ள மக்​கள் சேவைக்கு ஒரு சான்​று" என கூறியுள்​ளார்.

இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி விடுத்​துள்ள வாழ்த்​துச் செய்​தி​யில், "இந்​திய வரலாற்​றிலேயே மிக நீண்ட காலம் பணியாற்​றிய பிரதம​ராக இருக்​கும் மோடி அவர்​களுக்கு வாழ்த்துகள். சமீபத்​தில் நாம் ரோமில் மீண்​டும் சந்​தித்து பேசியது, நமது நாடு​கள் மற்​றும் மக்​களுக்கு புதிய வாய்ப்புகளையும், எதிர்​காலத்​தை​யும் உரு​வாக்​கு​வதற்​கான உத்தி​களை நாம் இணைந்து தொடங்​கியது மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறி​யுள்​ளார்.

இலங்கை அதிபர் அனுர குமார திஸா​நாயக்க தனது எக்ஸ் பக்கத்தில், "பு​திய சாதனை படைத்​துள்ள பிரதமர் மோடிக்கு எனது அன்​பான ​வாழ்​த்​துகள்​.இரு ​நாடு​களுக்​கும்​ இடையி​லான நீடித்​த உறவு​களை மேலும்​ வலுப்​படுத்​த த​யா​ராக உள்​ளேன்​" என பதி​விட்​டுள்​ளார்​.

நேருவின் சாதனையை முறியடித்தார் - நீண்ட காலம் பதவி வகித்த பிரதமரானார் மோடி
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டப் பணியாளர்களின் ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in