அரிய நோய் பாதித்த சிறுமியின் மருந்துக்கு ஆந்திர அமைச்சர் லோகேஷ் ரூ.6 கோடி நிதியுதவி

அரிய நோய் பாதித்த சிறுமியின் மருந்துக்கு ஆந்திர அமைச்சர் லோகேஷ் ரூ.6 கோடி நிதியுதவி
Updated on
1 min read

கர்னூல்: ஆந்​திர மாநிலம் கர்​னூல் மாவட்​டம், பெல்​துர்த்​தியை சேர்ந்த சுரேஷ் - புஷ்பலதா தம்​ப​திக்கு கடந்த ஆண்டு ஏப்​.12-ம் தேதி பெண் குழந்தை பிறந்​தது. அந்தக் குழந்​தைக்​குப் பிறந்​தது முதலே ‘ஸ்​பைனல் மஸ்​குலர் அட்​ராபி’ (எஸ்​எம்​பி) எனும் அரிய வகை நோய் இருந்​தது.

மேலும் நோய்க்​குச் சிகிச்சை அளிக்க தேவைப்​படும் ஒரு ஊசி​யின் மதிப்பு ரூ.16 கோடி எனவும் அந்த மருந்துவெளி​நாட்​டில் இருந்து வரவழைக்க வேண்​டும் என்​றும்மருத்​து​வர்​கள் கூறி​யுள்​ளனர். இதுதொடர்​பாக ​குழந்​தை​ புனர்விகாயின் பெற்​றோர் சமூக வலை​தளங்​கள் மூலம் உதவி கோரினர். இதில் கடந்த ஓராண்​டில் ரூ.10 கோடி மட்டுமே வசூலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்​திர கல்​வித் துறை அமைச்​சர் நாரா லோகேஷ், ஹைத​ரா​பாத்​தில் அக்​குழந்தை கிசிச்சை பெறும் மருத்​து​வ​மனைக்கு சென்​றார். குழந்​தை​யின் பெற்​றோரை நலம் விசா​ரித்த அவர், மருத்​து​வர்​களிடம் சிகிச்சை குறித்​தும் கேட்​டறிந்​தார்.

பிறகு ரூ.6 கோடியை தானே வழங்​கு​வ​தாக உறுதி அளித்​தார். இதையடுத்து வெளி​நாட்​டில் இருந்து வரவழைக்​கப்​பட்ட ஊசி மருந்தை நேற்று அவர் நேரில் வழங்​கி​னார். அந்த ஊசி புனர்விகா க்கு செலுத்​தப்​பட்​டது. அப்​போதுகுழந்​தை​யின் பெற்​றோர் அவருக்கு நன்றி தெரி​வித்​தனர். பிறகு ‘எக்​ஸ்' தளத்​தில் “குழந்தை புனர்விகா நீண்ட ஆயுளு​டன் வாழ வேண்​டும்” என அமைச்​சர் லோகேஷ் பதி​விட்​டுள்​ளார்​.

அரிய நோய் பாதித்த சிறுமியின் மருந்துக்கு ஆந்திர அமைச்சர் லோகேஷ் ரூ.6 கோடி நிதியுதவி
மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் கொள்ளை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in