மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் கொள்ளை

மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் கொள்ளை
Updated on
1 min read

போபால்: பட்​டப்​பகலில் வங்​கி​யில் புகுந்து ரூ.15 கோடி மதிப்​புள்ள நகைகள், ரொக்​கம் கொள்ளை அடிக்​கப்​பட்ட சம்​பவம் மத்​திய பிரதேசத்​தில் நடந்​துள்​ளது.

மத்​திய பிரதேச மாநிலம் சிங்க்​ராவ்லி மாவட்​டத்​தில் மகா​ராஷ்டிர வங்​கிக் கிளை உள்​ளது. இந்த வங்​கிக் கிளைக்கு நேற்று முன்​தினம் பிற்​பகலில் 2 பேர் வாடிக்​கை​யாளர்​கள் போல வந்​தனர். அவர்​கள் உள்ளே வந்​தவுடன் அடுத்​த​தாக 3 பேர் உள்ளே நுழைந்​தனர். உள்ளே வந்​ததும் 5 பேரும் தங்​களிட​மிருந்த துப்​பாக்​கி​களை எடுத்து மேலே சுட்டு வாடிக்​கை​யாளர்​களை பயமுறுத்​தினர். அனை​வரை​யும் துப்​பாக்கி முனை​யில் மிரட்டி வங்கி மேலா​ளரை அழைத்து லாக்​கர் சாவி​களைக் கேட்​டனர்.

அவர் தரமறுத்த போது அவரது தலை​யில் துப்​பாக்​கி​யின் பின்​பகு​தி​யால் தாக்கி சாவியைப் பிடுங்​கினர். இதில் வங்கி மேலா​ளர் தலை​யில் காயமடைந்​தார். 2 பேர் லாக்​கர் ரூமில் நுழைந்​து, வங்​கிக் கிளை​யில் பொது​மக்​கள் அடகு வைத்​திருந்த நகைகளை அள்​ளினர். மீதமிருந்த 3 பேரும் வாடிக்​கை​யாளர்​கள், வங்கி ஊழியர்​களை துப்​பாக்கி முனை​யில் நிறுத்தி வைத்​திருந்​தனர்.

20 நிமிடங்​களில்.. அவர்​கள் உள்ளே புகுந்த 20 நிமிடங்​களில் தங்க நகைகள், ரொக்​கத்தை கொள்ளை அடித்​துக் கொண்டு தப்​பி​விட்​டனர். போலீ​ஸார் வரு​வதற்​குள் அவர்​கள் தப்​பியோடி​விட்​ட​தாக வங்கி மேலா​ளர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து சிங்க்​ராவ்லி போலீஸ் எஸ்​.பி. மணீஷ் காத்ரி கூறும்​போது, “பட்​டப்​பகலில் இந்​தக் கொள்​ளைச் சம்​பவம் நடந்​துள்​ளது. 9 முதல் 10 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள், ரூ.20 லட்​சம் ரொக்​கம் என மொத்​தம் ரூ.15 கோடி மதிப்​புள்ள பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டுள்​ளன.

வந்​தவர்​களில் ஒரு​வர் மட்​டுமே ஹெல்​மெட் போட்டு வந்​துள்​ளார். மற்​றவர்​கள் அனை​வரும் முகங்​களை மறைக்​காமலேயே வந்​துள்​ளனர். அரு​கில் இருந்த கடைகளில் வைக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வான முகங்​களை வைத்து அவர்​களைத் தேடி வரு​கிறோம். நகைகளைக் கொள்ளை அடித்​ததும் அவர்​கள் மோட்​டார் சைக்​கிள்​களில்​ தப்​பியோடி உள்​ளனர்​’’ என்​றார்​.

மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகை, ரொக்கம் கொள்ளை
தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in